தபால் ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு தொழிற்சங்கத்தலைவர்கள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனிடம் மனு அளித்தனர்
கமலேஷ் சந்திரா ஊதியக் குழு அறிக்கையின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும், நடந்து முடிந்த தொழிற்சங்க உறுப்பினர் சேர்ப்பு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் உள்ளிட்ட இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில் கடந்த 22ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத் தலைவர் ஜெ.ராமமூர்த்தி கூறியதாவது :கிராமப்புற அஞ்சல் ஊழியர்களாக 2 லட்சத்து 65 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள். இவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்காக அரசு அமைத்த ‘கமலேஷ் சந்திரா’ கமிட்டி தனது பரிந்துரைகளை 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பித்தது. அந்தப் பரிந்துரைகளை அஞ்சல் துறை வெளியிடவில்லை. பல கட்டப் போராட்டங் களை நடத்திய பின் கடந்தாண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி குழு அறிக்கையை வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை பலகட்டப் போராட் டங்களை நடத்தியும் இதுவரை அந்தப் பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை. எனவே கடந்த 22ஆம் தேதி முதல் 8 தொழிற்சங்கங்கள் கூட்டாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இதனால் 1 லட்சத்து 30 ஆயிரம் கிராமங்களில் மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம், ஆதார் உள்ளிட்ட சமூக நலத் திட்டங் கள் வழங்கும் சேவைகள் பாதிக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் 18 ஆயிரம் கிராமப்புற அஞ்சலகங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக அஞ்சல் துறையின் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களும் 4 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். எனவே உடனடியாக கமலேஷ் சந்திரா பரிந்துரைகளை அமல் படுத்த வேண்டும். நடந்து முடிந்த தொழிற்சங்க உறுப்பினர் சேர்ப்பு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும். இதனால் தொழிற்சங்க அங்கீகாரம் முடக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான எந்தச் சலுகையும் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு கிடையாது. எனவே கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு அரசு ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும், சீருடை வழங்க வேண்டும். 12 ஆண்டுகளுக்கு மேலாகச் சேவை முடித்தவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற பின் வழங்க வேண்டிய பணப்பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும். அஞ்சல் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பஞ்சப்படி வழங்கும் போதே கிராமப்புற ஊழியர்களுக்கும் பஞ்சப்படி வழங்க வேண்டும். கிராமப்புற ஊழியர்களுக்கும் நியாயமான ஓய்வூ தியம் வழங்க வேண்டும்.சமீபத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை. எனவே கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 1ஆம் தேதி காலை 10. 40 மணிக்குத் தமிழக ஆளுநர் மூலம் பாரதப் பிரதமருக்கு மனு அளிக்க உள்ளோம். அதைத் தொடர்ந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும், மாநிலங் கவை உறுப்பினர்களையும் சந்தித்து எங்களது கோரிக்கை மனுவை அளிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.இச்சந்திப்பின் போது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் எம்.துரைபாண்டியன், அஞ்சல் ஆர்எம்எஸ் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் பி.பரந்தாமன், தபால் கணக்கு மாநிலச் செயலாளர் ஆர்.பி.சுரேஷ், தேசிய அஞ்சல் தபால்காரர்கள் சங்க மாநிலப் பொருளாளர் ஆர்.வெங்கட்ரமணி, பி.மோகன், ஏ.வீரமணி, ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் சிவகுருநாதன் உள்ளிட்டோர் உள்ளனர்.
போராட்டம் வெற்றி பெற சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் வாழ்த்துக்கள்!