Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, May 21, 2018

உச்சம் தொட்டது பெட்ரோல்-டீசல்



வரலாறு காணாத விதத்தில் முதல் முறையாக ரூ.84 தாண்டி உச்சத்தை எட்டியது பெட்ரோல் - டீசல் விலை.இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் விலை சற்று மாறுபட்டாலும், மொத்தத்தில் இதுவரை இல்லாதஅளவிற்கு பெரும் விலையை பெட்ரோல் மற்றும் டீசலுக்கு இந்திய மக்கள் ஞாயிறன்று அதிகாலை முதல் கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள்.பெட்ரோல் விலை லிட்டருக்கு 33 பைசா - ஞாயிறன்று உயர்த்தப்பட்ட தைத் தொடர்ந்தும், டீசல் விலை லிட்டர்ஒன்றுக்கு 26 பைசா உயர்த்தப் பட்டதைத் தொடர்ந்தும் இவற்றின் விலைகள் புதிய உச்சத்தை எட்டி யுள்ளன. ஒவ்வொரு நாளும் பெட்ரோல் - டீசல் விலையை தீர்மானிக்கிற நடை முறையை 11 மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது மோடி அரசு. ஒவ்வொரு நாளும் குறைத்ததைவிட சிறுகச் சிறுக உயர்த்தியதே நடைமுறையாக மாறிப்போனது. இந்நிலை யில், கர்நாடக தேர்தலுக்காக கடந்த19 நாட்கள் விலையில் எந்த மாற்ற மும் செய்யப்படாமல் இருந்தது. தேர்தல் முடிந்த நிலையில் உடனடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. 

கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு, ஞாயிறன்று தில்லியில் பெட்ரோல் விலை ரூ.76.24 ஆகவும் டீசல் விலை ரூ.67.57 ஆகவும் அதிகரித்துள்ளது. சென்னையில் முறையே ரூ.79.13 மற்றும் ரூ.71.32 ஆக அதிகரிக் கப்பட்டுள்ளது. உச்சபட்சமாக மும்பையில் பெட்ரோல் விலை ரூ.84.07 எனவும் டீசல் விலை ரூ.71.94 எனவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.2013 செப்டம்பர் 14 அன்று கடைசியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையான உச்சத்தை எட்டியிருந்தது. அப்போது பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.76 என உயர்ந்தது. தற்போது அதையெல்லாம் தாண்டி ரூ.84 என்ற அளவிற்கு வந்துள்ளது.இத்தகைய மிக கடுமையான விலை உயர்வுக்கு வழக்கம் போலசர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டதாக காரணம் காட்டியிருக்கிறது மத்திய அரசு. சர்வதேச எண்ணெய் நிலவரத்தை கவனித்துக் கொண்டிருக்கிறோம் எனவெற்று வார்த்தைகளை மட்டுமே மத்திய அரசின் பொருளாதார விவகா ரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் உதிர்த்திருக்கிறார். பாஜக அரசு வந்தபிறகு பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை9 முறை அதிகரித்துள்ளது. இதுவே விலை உயர்வுக்கு மிக முக்கிய காரணம் என்பதை ஏற்கவும் நீக்கவும் மோடி அரசு மறுத்து வருகிறது. இந்த வரிவிதிப்புகளோடு மாநில விற்பனை வரிகள் உள்ளிட்ட பல்வேறுவிதமான வரிகள் ஒட்டு மொத்தமாக விலையில் சேர்க்கப்பட்டு மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளன. இந்திய மக்களின் வாழ்விலும் இந்திய பொருளாதாரத்திலும் மிகப்பெரும் சூறாவளியாக இது விளைவுகளை ஏற்படுத்தும் என பொருளதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Image result for theekkathir