Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, April 8, 2018

கிளை செயலர்கள் கூட்ட முடிவுகள்


நமது மாவட்ட சங்கத்தின் "கிளை செயலர்கள்" கூட்டம், 07.04.2018 அன்று மாவட்ட சங்க அலுலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் M . விஜயன், மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். தோழர் M . சண்முகம், மாவட்ட உதவி செயலர் அஞ்சலியுறை நிகழ்த்த, தோழர் P . தங்கராஜூ, மாவட்ட பொருளர் வரவேற்புரை வழங்கினார். 

தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி கூட்டத்தை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, மாவட்ட செயலர் தோழர் E . கோபால் சிறப்புரை வழங்கினார். TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், வாழ்த்துரை வழங்கினார். 

பின்னர் நடைபெற்ற விவாதத்தில் 23 கிளை செயலர்கள் பங்குபெற்றனர். விவாதத்திற்கு பதில் அளித்து மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கியபின், கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது. 

01. AUAB மாவட்ட சங்கங்களின் முடிவின்படி, 12.04.2018 அன்று நடைபெறவுள்ள மாலை நேர தர்ணாவில், நமது சங்க உறுப்பினர்களை திரளாக பங்கேற்க செய்வது!.  

02. 14.04.2018 அன்று அனைத்து கிளைகளிலும் "அம்பேத்கர் தினத்தை" அனுஷ்டிப்பது!. 

03. 01.05.2018 அன்று "மே தினத்தை" சிறப்பாக கொண்டாடுவது!. 

04. அகர்தலா மத்திய செயற்குழு முடிவின்படி, 03.05.2018 அன்று "கவன ஈர்ப்பு தினம்" கடைபிடித்து, அனைத்து கிளைகளிலும் "கருப்பு பேட்ஜ்" அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது 

உள்ளிட்ட சில அமைப்பு முடிவுகளும் எடுக்கப்பட்டது. தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.  

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்