தமிழ்நாட்டில் பிற மொபைல் சேவை நிறுவனங்களில் இருந்து ஒரு லட்சத்து 61 ஆயிரத்தி 742 பேர் பி.எஸ்.என்.எல். சேவையில் இணைந் துள்ளதாக தமிழ்நாடு மண் டல தலைமை பொதுமேலாளர் ஆர். மார்சல் ஆண்டனி லியோ தெரிவித்துள்ளார்.
சென்னையில் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியது வருமாறு:
தமிழ்நாட்டில் தற்போது பிற நெட்வொர்க்கில் இருந்து 2017 ஏப்ரல் மாதம் முதல் 2018 பிப்ரவரி மாதம் வரை 1,61,742 வாடிக்கையாளர் கள் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இணைந்துள்ளனர். 2018 பிப்ரவரி மாதம் மட்டும் 3,06,282பேர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இணைந் தனர். குறிப்பாக தற்போது பிரச்சனையில் உள்ள ஏர் செல் நிறுவனத்தில் இருந்து மட்டுமே 1,28,790 வாடிக்கையாளர்கள் பதிவு செய்து காத் திருக்கின்றனர்.
விரைவில் நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் 10 வட்டங்களில் 4ஜி சேவையை பிஎஸ்என்எல் துவங்க உள்ளது. இதில் தெற்கு மண்டலத்தில் தமிழ்நாடு வட்டமும் இடம் பெற்றுள்ளது.தமிழ்நாட்டில் சுற்றுலாத் தளங்கள், பொதுஇடங்கள் மற்றும் கிராமப்புறங்களில் சில்லறை மற்றும் மொத்த பயனாளர் திட்டத்தின் கீழ் பிஎஸ் என்எல் வைபை சேவைகளை வழங்குகிறது.
தமிழ் நாட்டில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்காக மொத்தம் 239 வாடிக்கையாளர் சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.இதில் 22 முதல் தரசேவை மையங் கள், 46 இரண்டாம் தர சேவை மையங்கள், 171 மூன்றாம்தர சேவை மையங்கள் வாடிக் கையாளர்களின் பலவிதமான தேவைகளுக்கு ஏற்ப இயங்கி கொண்டிருக்கின் றன. முகநூல், டுவிட்டர் மூலமாகவும் புதிய தொலைபேசி இணைப்புகள் பெற்றுக் கொள்ளவும் மற்றும் அவர்களுடைய குறைகளை தெரிவித்துக் கொள்ளவும் வசதியாக ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
விரிவாக்க செயல் திட்டத் தின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும் 2ஜி, 3ஜி உபகரணங் கள் கோவை, சேலம் நகரங்களில் தரம் உயர்த்தப்பட்டுள் ளது.திண்டுக்கல், காரைக் குடி, சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம், இராமநாதபுரம், இராணிப்பேட்டை, அரக்கோணம், கொடைக்கானல்,
வாணியம்பாடி,பழனி,குடியாத்தம், பரமக் குடி, தேனி நகரங்களில் 2ஜிஉபகரணங்களை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் 2018க்குள் இந்தப் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசின் மாபெரும் தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் வாடிக்கையா ளர்களுடன் தனது நட்புணர்வை பேணும் வகையில்(மொபைல்) பல புதிய திட்டங்களும் கட்டணங்க ளும் அறிவித்துள்ளது. பாப்புலர் வாய்ஸ் திட்டம், சிறப்பு டேட்டா திட்டங்கள், அன்லிமிட்டெட் வாய்ஸ் மற்றும் டேட்டா திட்டங்கள், சிறப்பு கட்டணச்சலுகைகள், வைபை பேக்கேஜ், பிஎஸ் என்எல்-ல் இருந்து விட்டுச் சென்றவர்களை ஈர்க்க மொபைல் போஸ்ட் பெய்டு திட்டமான “கர்வாப்ஸி’’ திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டத்தில் பிஎஸ் என்எல் வாடிக்கையாளர்களுக்கு இரவு 10.30 மணி முதல் காலை 6 மணிவரை இலவசஅழைப்புகள் வழங்கப்படுகிறது. அதே போல ஞாயிறு முழுவதும் லேண்ட்லைனில் இருந்து எந்த நெட்வொர்க் கிற்கும் இலவசமாகப் பேசும் சலுகையை 1.02.2018 முதல் 30.4.2018 வரை நீட்டித்துள் ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தமிழ்நாடு வட்டார பிஎஸ் என்எல் உயர் அதிகாரிகள் பி.சந்தோஷ், ஜி.ரவி, டி.மோகன், டி.பூங்கொடி, கே.ராஜசேகரன், பி.வி.கருணாநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.