Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, February 26, 2018

செங்கடலென சிவந்தது டில்லி!


All Unions and Associations of BSNL சார்பாக, 01.01.2017 முதல் ஊதிய மாற்றம், தனி துணை டவர் நிறுவனம் அமைக்கும் முயற்சியை கை விட வேண்டும், ஓய்வூதிய மாற்றம், VRS போன்ற கோரிக்கைகளை மையப்படுத்தி, 23.02.2018 அன்று டில்லியில் நமது துறை தலைமை அலுவலகமான சஞ்சார் பவன் நோக்கி பேரணி செல்ல அறைகூவல் கொடுக்கப்பட்டிருந்தது. 

காலை 11மணிக்கு, பேரணி துவங்க திட்டமிடப்பட்டிருந்தாலும், 10 மணிக்கே, ஆயிரக்கணக்கான, BSNL ஊழியர்கள்/அதிகாரிகள் டில்லி ஜன்பத்தில் உள்ள EASTERN COURT பகுதியில் குழுமினர். 

விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே, மத்திய சங்க தலைவர்கள் முதலில் எழுச்சி மிகு உரை வழங்கினர். பின்னர், துவங்கிய பேரணி பாராளுமன்ற தெருவை அடைந்ததும், காவல் துறை வழக்கம் போல், தடுப்பு ஏற்படுத்தி, நம்மை தடுத்தனர். சிறிது நேரம் தள்ளு முள்ளு ஏற்பட்டது. காவல் துறை உடனடியாக DoT செயலருடன் பேச்சு வார்த்தைக்கு, ஏற்பாடு செய்தனர். 

அதனை தொடர்ந்து, பாராளுமன்ற தெருவில் நடைபெற்ற கூட்டத்தில், நமது தலைவர்கள் சிறப்பான உரை வழங்கினர். 

நாடு முழுவதிலிருந்தும், 5000க்கும் மேற்பட்ட BSNL ஊழியர்கள்/அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த பேரணியில், நமது சேலம் மாவட்டத்திலிருந்து,  மாவட்ட சங்கம் சார்பாக, 27 தோழர்கள் பேரணியில் பங்கு பெற்றோம். 

நமது மாவட்ட சங்க பதாகை, MEDIA நண்பர்களின் கவனத்தை கவரும் வண்ணம் அமைந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இயக்கத்தில் பங்கு பெற்ற அனைத்து தோழர்களுக்கும் BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துக்கள். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்