Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, October 12, 2017

PLI கோரி 13.10.2017 அன்று ஆர்ப்பாட்டம் !

Image result for ஆர்ப்பாட்டம்



BSNLல் பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 7000 போனஸ், PLI, வழங்க வலியுறுத்தி 13.10.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடத்த நமது மத்திய சங்கம் அறைகூவல் கொடுத்துள்ளது. அதன்படி, நமது மாவட்ட சங்கம் சார்பாக, 13.10.2017 அன்று மாலை 5 மணி அளவில், சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாவட்டம் முழுவதிலுமிருந்து, பெருவாரியான தோழர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதை, கிளைகள் உத்தரவாடப்படுத்த வேண்டும் என தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.

BSNLல் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 7 ஆண்டுகளாக போனஸ் வழங்காத சூழலில் கடந்த ஆண்டு, கடும் போராட்டத்திற்கு பின்  ரூ. 3000 போனஸாக பெற்றோம். இந்த ஆண்டு போட்டி சூழலை, ஊழியர்கள் திறம்பட கையாண்டு, நிறுவனத்தை செயல்பாட்டு லாபத்தில் கொண்டு வந்துள்ள நிலையில், நிர்வாகம் தாமாக முன்வந்து போனஸ் வழங்கயிருக்கவேண்டும். ஆனால், போராட்டம் இல்லாமல், என்றுமே, எதையுமே நாம் பெற்றதாக வரலாறு இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக, இந்த போராட்டம் நம் மீது தினிக்கப்பட்டுள்ளது, அதை வெற்றிகரமாக நமது மாவட்டத்தில் அமுல்படுத்த, அலைகடலென திரண்டு வாரீர் என தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஆர்ப்பரித்து போராடி, கோரிக்கையை வென்றடைவோம்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்