Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, September 7, 2017

மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுப் படுகொலை - ஆழ்ந்த இரங்கல்




மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், 05.09.2017 அன்று பெங்களூரில்  படுகொலை செய்யப்பட்டார். வெறுப்பு மற்றும் சகிப்பின்மை அரசியலுக்கு எதிராகப் பேசுவோர் எப்படி கொலை செய்யப்பட்டு வருகிறார்களோ அதே பாணியில் இக்கொலையும் நடந்திருக்கிறது. கோவிந்தபன்சாரே, தபோல்கர், கல்புர்கி, ஆகியோர் வரிசையில், இந்த கொலையும் நடந்துள்ளது. 

இவர்கள் அனைவரும் மதமூட நம்பிக்கைகள், பத்தாம்பசலித்தனமான கொள்கைகளுக்கு எதிராக மிகவும் துணிச்சலு டன் பிரச்சாரம் செய்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

BSNLEU சேலம் மாவட்ட சங்கம் இந்த படுகொலையை கண்டிக்கிறது. பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மறைவிற்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது. 

வருத்தங்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்