Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, July 20, 2017

வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட, "சபதமேற்ற" ஓமலூர் விரிவடைந்த மாவட்ட செயற்குழு



19.07.2017 அன்று ஓமலூரில், நமது மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு கம்பீரத்துடன் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன், தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக, சங்க கொடியை ஓய்வு பெற்ற தோழர் பெருமாள், JAOஅவர்கள்  விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம் அஞ்சலி உரை நிகழ்த்த, ஓமலூர் கிளை செயலர் தோழர் M . செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார். 

BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S. தமிழ்மணி செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். மாவட்ட செயலர் தோழர் E. கோபால் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி விளக்க உரை வழங்கினார். நமது மாநில செயலர் தவிர்க்க முடியாத காரணத்தால் வர இயலாத சூழலில், மாநில உதவி செயலர் தோழர் S . சுப்பிரமணியம் செயற்குழுவில் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். 

மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் ஹரிஹரன், தங்கராஜு, ராமசாமி, சண்முகம், சார்லஸ் பிரேம் குமார் கருத்துரை வழங்கினார்கள். TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர் கூட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை ஆதரிப்பதாக அறிவித்தார். 

பின்னர் மாவட்ட செயலர் தோழர் E . கோபால், தொகுப்புரை வழங்கினார். நமது மாவட்டத்தில் 27.07.2017 ஒரு நாள் வேலை நிறுத்தத்தை நூறு சதம் வெற்றி பெற செய்வது, அதற்கு ஏதுவாக கிளைகளில் கூட்டங்கள் நடத்துவது, ஊழியர்களை வீட்டில் சென்று சந்தித்து ஆதரவு கோருவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

நிகழ்வின் ஒரு பகுதியாக, நமது மூத்த தோழர் N . கௌசல்யன் பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது. தோழர் N . கௌசல்யன் அவர்களை மாநில சங்கம், மாவட்ட சங்கம், கிளை சங்கங்கள் சார்பாக கௌரவப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, சென்ற செயற்குழுவிற்கு பின், நமது மாவட்டத்தில் ஓய்வு பெற்ற நமது சங்கத்தின் தோழர்கள் கௌரவிக்கப்பட்டனர்.  

தோழர் R . காட்டுராஜா கிளை பொருளர், ஓமலூர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். மாவட்டம் முழுவதிலுமிருந்து 150க்கும் மேற்பட்ட தோழர்கள் திரளாக கூட்டத்தில் கலந்து கொண்டனர். அமைதியான இடம், அன்பான உபசரிப்பு, அறுசுவை சைவ, அசைவ உணவு, சிறப்பான விருந்தோம்பல், நேர்த்தியான விளம்பரங்கள் என சிறப்பான ஏற்பாடுகள் செய்த ஓமலூர் கிளை சங்கத்தை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்