Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, June 11, 2017

TNTCWU சேலம் மாவட்ட செயற்குழு


TNTCWU சேலம் மாவட்ட செயற்குழு, 10.06.2017 அன்று BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, TNTCWU மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம், தலைமை தாங்கினார். மெய்யனுர் கிளை செயலர் தோழர் விஜயகுமார் வரவேற்புரை வழங்கினார். 

TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி விளக்கவுரை வழங்கினார். பின்னர், கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்கு பெற்றனர். 

BSNLEU மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M . பன்னீர்செல்வம், TNTCWU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் செல்வம் கருத்துரை வழங்கினர். 

இறுதியாக, BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால் சிறப்புரை வழங்கினார். 

சம்பள பிரச்சனை, சந்தா, மாநில செயற்குழு முடிவுகள், பணி திறனுக்கேற்ற கூலி, போராட்டங்கள், இயக்கங்கள், உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. TNTCWU மாவட்ட தலைவர் தோழர் K . ராஜன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்