கடந்த வருடம் DY CLC ஆக பணியாற்றிய திரு ஸ்ரீவத்சவா அவர்களுடன், நமது TNTCWU சங்கம் நடத்திய சமரச பேச்சு வார்த்தையின் தொடர்ச்சியாக, 25/10/2016 அன்று சில பணிகளுக்கு SKILLED, SEMI SKILLED சம்பளம் வழங்கிட உத்தரவு வெளியிடப்பட்டது.
ஆனாலும் இந்த உத்தரவு பொதுவாக அனைத்து மாவட்டங்களிலும் அமுல்படுத்தப் படவில்லை. முந்தைய DY CLC பணி ஓய்வு பெற்று விட்டு புதிய DY CLC திரு ஸ்ரீனிவாஸ் அவர்கள் பொறுப்பெடுத்த பிறகு 02/06/2017 அன்று சமரச பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்பட்டது.
தமிழ்மாநில BSNL நிர்வாகத்தின் சார்பில் திரு ராஜசேகர் AGM ADMN அவர்களும், நமது TNTCWU சங்கம் சார்பில் தோழர்கள் M.முருகையா, (மாநிலத்தலைவர்), C.வினோத்குமார், (மாநிலச் செயலர்), C. பழனிச்சாமி (மாநில உதவிச் செய்லர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
25/10/2016 தேதியிட்ட DY CLC யின் உத்தரவை அமுல் படுத்த வேண்டும் என்று நமது TNTCWU சங்கம் சார்பாக கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு கேரள மாநில நிர்வாகம் CATEGORISATION OF WORK சம்பந்தமாக வெளியிட்ட உத்தரவையும் சுட்டிக் காட்டினோம்.
BSNLலில் பணிபுரியும் அனைத்து ஒப்பந்த ஊழியர்களையும் திறனற்றவர்கள் (UNSKILLED) என்று வகைப்படுத்தி,BSNL நிர்வாகம் சம்பளம் வழங்கி வருகிறது, இது தொழிலாளர்களை சுரண்டும் செயல், தற்போது ஒப்பந்தத் தொழிலாளர்கள் கேபிள் பணி, எழுத்தர் பணி, காவல்பணி, ஓட்டுநர் பணி,என பல்வேறு திறன்மிக்கப் பணிகளில் பயன்படுத்தப்படுகின்றார்கள், எனவே அவர்களுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள உரிய கூலியைக் கொடுக்க வேண்டும் என கடுமையாக நமது TNTCWU சங்கம் வாதிட்டது.
நீண்ட விவாதத்திற்குப் பிறகு மாநிலம் முழுவதும் நடைபெறும் அனைத்து ஒப்பந்த பணியையும் UNSKILLED, SEMISKILLED , SKILLED என்று பிரித்து முழு அறிக்கை மாநில நிர்வாகம் அளிக்க வேண்டும் என்று DY CLC CHENNAI உத்தரவிட்டுள்ளார். அறிக்கைக்குப் பின்னர், ஒப்பந்த தொழிலாளர்கள் செய்யும் பணி அடிப்படையில் UNSKILLED, SEMI SKILLED, SKILLED சம்பளம் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
நிர்வாகம் தவறான அறிக்கை அளிக்ககூடும் என்று நமது சந்தேகத்தை எழுப்பினோம். நிர்வாகத்தின் அறிக்கைக்கும் நமது கோரிக்கைக்கும் முரண்பாடு ஏற்பட்டால் தொழிலாளர் நல அதிகாரிகள் கள ஆய்வு செய்து அதன் அடிப்படையில் உத்தரவு வெளியிடப்பட்டும் என்று தெளிவுபடுத்தியுள்ளார். அடுத்த கூட்டம் 29/06/2017 அன்று சென்னையில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
திறன்மிக்கப் பணிகளில் தொழிலாளியைப் பயன்படுத்திக்கொண்டு திறனற்ற பணிக்கான கூலியைத்தருவது மாபெரும் உழைப்புச்சுரண்டலாகும் என நாம் போராடியதின் விளைவாக, DY CLC விளக்க உத்தரவை வெளியிட்டார். அதை ஏற்று, தமிழ் மாநில BSNL நிர்வாகமும் அந்த உத்தரவை Endorse செய்து மாவட்டங்களுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. BSNL தமிழ் மாநில உத்தரவு எண் . ADMN/100-03/CL-ISSUES/17-18/dtd 05.06.2017.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
BSNL தமிழ் மாநில உத்தரவுடன் இணைக்கப்பட்டுள்ள DY CLC விளக்க உத்தரவு காண இங்கே சொடுக்கவும்.