Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, April 7, 2017

மீண்டும் ஒரு சாதனை!

 Image result for team achievement images


2017 மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் 29,52,251 (சுமார் 29.5 லட்சம்) புதிய சிம் கார்டுகள் விற்பனை செய்து, நமது BSNL நிறுவனம் மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளது. இது வரை எந்த ஒரு மாதத்திலும் இவ்வளவு புதிய செல்பேசி சந்தாதாரர்களை BSNL பெற்றதில்லை. 

நமது ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டு முயற்சியால், செயல்பாட்டால், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் குஜராத் மாநிலம்,2,82,982 செல்பேசி சந்தாதாரர்களை பெற்று முதலிடத்திலும், உத்தர பிரதேசம் (கிழக்கு) 2,54,542 செல்பேசி சந்தாதாரர்களை பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளது. 

ரிலையன்ஸ் ஜியோ பல "_____________  மஸ்தான்" வித்தைகள் காட்டிய போதும், சந்தாதாரர்கள் BSNL நிறுவனத்தை நம்பி வந்துள்ளது, பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது. நமது நிறுவனத்தை  காக்கும் முயற்சியில் அல்லும் பகலும் அயராது பாடுபடும், அனைவருக்கும் BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
DIRECTOR(CM) கடிதம் காண இங்கே சொடுக்கவும்
2017 மார்ச் மாதத்தில் நாம் அடைந்த இலக்கு 
2017 ஏப்ரல் மாதத்திற்கு நமது இலக்கு