Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, April 3, 2017

தடம் புரளும் இந்திய ரயில்வே

என்ன செய்யப் போகிறது மோடி அரசு?
மாநிலங்களவையில் டி.கே.ரங்கராஜன் கேள்வி


ரயில்வேக்கு போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்து பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்தி அதன்மூலம் ரயில் பயணிகள் மற்றும் மக்களின் உயிர்களையும், உடைமை களையும் பாதுகாத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லங்களவை உறுப்பினர் டி.,கே.ரங்கராஜன் கூறினார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட்டில் ரயில்வேக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்து நடைபெற்ற விவாதத்தில் டி.கே.ரங்கராஜன் பேசியதாவது:‘‘மத்திய ரயில்வே அமைச்சர் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்ற முறை தமிழ்நாட் டிற்கு வந்து புதிய சில திட்டங்களைத் தொடக்கி வைத்திருக்கிறார். அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.நமது நாட்டில் ரயில்வேக்கு என்று தனி பட்ஜெட் 1924இல் தொடங்கியது.ரயில்வே உள்கட்டமைப்புக்கு கவனம் செலுத்த வேண்டும் என்று இவ்வாறு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இப்போது அவ்வாறு போதிய கவனம் செலுத்த முடியாத அளவிற்கு ரயில்வே பட்ஜெட்டை, பொது பட்ஜெட்டோடு இணைத்துவிட்டீர்கள்.எனினும் விவேக் தேவ்ராய் அளித்துள்ள பத்து பக்க குறிப்பிலிருந்து புதிய லைன்கள் மற்றும் புதிய ரயில்கள் குறித்து அறிவிப்புகள் வந்திருக்கின்றன.இதிலிருந்து பார்த்தோமானால் பட்ஜெட்டை தனியே பிரித்ததிலும் ஒன்றாக சேர்த்ததிலும் வித்தியாசம் ஒன்றுமில்லை.

பறிக்கப்பட்ட ரயில்வே சுயாட்சி

ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட் டோடு இணைத்திருப்பதன் மூலம் ரயில்வேயின் சுயாட்சி இழக்கப்பட்டுவிட்டது. அதன் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்கப்போவதில்லை. இந்திய ரயில்வேக்கு நிதி அடிப்படையில் நிவாரணம் பெரிய அளவிற்கு இருக்கப்போவதில்லை. ஏனெனில் ரயில்வேஊழியர்களுக்கு சம்பளமும், ஊதியமும் ரயில்வே வருமானத்திலிருந்துதான் கொடுக்கப்போகிறார்களே தவிர, இதர மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் கிடையாது. ஒரேயொரு நிவாரணம், அரசாங் கத்திற்கு இந்திய ரயில்வே தனியே பங்காதாயத் தொகை ஐயாயிரம் கோடி ரூபாய் தர வேண்டிய தேவை இல்லை. ரயில் கட்டணம் ரயில்வே கட்டமைப்புச் செலவினம், சமூகக் கட்டுப்பாடு மற்றும் போட்டிஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திடும் என்று கூறுகிறது. இதன் உண்மைப் பொருள், கட்டணம் எதிர்காலத்தில் தொடர்ந்து உயரும் என்பதேயாகும்.இப்போது அது மொத்த செலவினத்தில் 57 சதவீதமாக இருக்கிறது. ரயிலில் பயணம் செய்பவர்களில் 50-60 சதவீதத்திற்கும் அதிக மானவர்கள் முறைசாராத் தொழிலாளர்கள். அவர்களால் அதிக கட்டணம் அளித்திட முடியாது. இந்திய ரயில்வேயின் துணை அமைப்புகளாக இருந்துவரும் இந்தியன் ரயில்வே ஃபைனான்ஸ் கார்ப்பரேசன், ஐஆர்சிடிசி, இர்கான், இந்தியன் ரயில்வேஸ் கன்ஸ்ட்ரக்சன் ஆர்கனைசேஷன் ஆகியவை தற்சமயம் பெரும் அளவில் லாபம் ஈட்டி வருகின்றன. அவை அனைத்தையும் தனியாரி டம் தாரை வார்த்திட நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஏன் இவ்வாறு செய்யப்போகிறீர்கள்? இது நல்லதல்ல, நேர்மையுமல்ல. இதனை மறுபரிசீலனை செய்திட வேண்டும்.பட்ஜெட்டுக்கு முதல் நாள், நிதி அமைச்சர், ரயில்வே மருத்துவமனைகள் நடத்தாது என்று அறிவித்தார். அதேபோன்று மலை ரயில்களான கல்கா – சிம்லா, சிலிகுரி - டார்ஜி லிங், நீலகிரி மலை ரயில், தனியாரிடம் தாரை வார்க்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனைமறுபரிசீலனை செய்திட வேண்டும். கடந்தாண்டு பட்ஜெட்டில் ரயில்வே நவீனமயத்திற்கு 8.5 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்று ரயில்வே அமைச்சர் கூறினார். இதில் 1.5 கோடி ரூபாய் மட்டும் எல்ஐசி மூலம் பெற்றிருக்கிறீர்கள். மீதித்தொகை குறித்து இதுவரை மவுனமாகி இருக்கிறீர்கள். ரயில் பயணிகள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சனையில் இவ்வளவு சுணக்கம் காட்டக்கூடாது.நாட்டில் ஆள் இல்லா ரயில்கேட்டுகள் அனைத்தும் ஒழிக்கப்படும் என்று அரசாங்கம் உறுதி அளித்தது. ஆயினும் அதற்குத்தேவையான அளவிற்கு நிதி ஒதுக்கப்பட வில்லை.இவ்வாறு டி.கே.ரங்கராஜன் பேசினார்.

Image result for theekkathir