Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, April 19, 2017

மத்திய சங்க செய்திகள்

Image result for bsnleu chq

DoT, GPF பட்டுவாடா பணியை தன் வசம் எடுத்து கொண்டு விட்டது. 18.04.2017 உத்தரவுப்படி, முதல் திட்டத்தில், 12 மாநிலங்களின் பட்டுவாடா DoT யால் செய்யப்படும். இரண்டாவது திட்டத்தில், நமது தமிழ் மாநிலம் உட்பட, எஞ்சியுள்ள மாநிலங்களின் பட்டுவாடா DoT வசம் சென்று விடும். இந்த நடவடிக்கையின் மூலம், GPF பட்டுவாடாவில் ஏற்படும் கால தாமதம் போக்கப்படும் என நம்பூகிறோம். இதன் மூலம் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. 

பத்தாம் வகுப்பு கல்வி தகுதி பெறாத ATT (பழைய RM, Group D) தோழர்கள் Telecom Technician (பழைய TM) பதவி உயர்வு தேர்வு எழுத, ஒரு முறை கல்வி தகுதி நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, நேற்று, 18.04.2017 நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, மனித வள இயக்குனர் திருமதி. சுஜாதா T. ராய் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினார். நமது சங்கத்தின் ஆழமான, அழுத்தமான, நியாயமான வாதத்தின் அடிப்படையில், கோரிக்கையை சாதகமாக பரிசீலிப்பதாக மனித வள இயக்குனர் உறுதி அளித்துள்ளார். 

சில Sr.TOA தோழர்களின் சம்பள விகிதம் 7100-200-10100 என்ற விகிதத்திலிருந்து, 6550-185-9325 என்ற விகிதத்திற்கு NEPP திட்டம் காரணமாக மாற்றப்பட்டது. சம்பள குறைவு இல்லை என்று சொன்னாலும், சம்பள விகித குறைவு அந்த தோழர்கள் மத்தியில் மனச்சோர்வை ஏற்படுத்தியிருந்தது. இந்த அநீதியை களைய, நமது சங்கம் பல முறை நிர்வாகத்தை சந்தித்து பேசியது. பல போராட்டங்களில், இந்த விஷயமும் ஒரு கோரிக்கையாக இருந்தது. தற்போது, நமது கோரிக்கையை நிறைவேற்ற, சாத்தியமான வழிகளை ஆராய, அமுல்படுத்த நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. கோரிக்கை வெற்றி பெறும் வரை நமது சங்கம் தொடர்ந்து போராடும். 

பதவிகள் பெயர் மாற்ற கமிட்டி கூட்டம் நேற்று, (18.04.2017) நடைபெற்றது. எஞ்சியுள்ள சில கேடர்களின் பெயர்களை மாற்ற, கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. நிர்வாக குழு ஒப்புதலுக்கு பின், உத்தரவு வெளியிடப்படும். அடுத்த கூட்டம், 26.06.2017 அன்று நடைபெறும். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்