Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, March 7, 2017

நெடுவாசல் ஆதரவு ஆர்ப்பாட்டம்

Image result for நெடுவாசல்

"ஹைட்ரோ கார்பன் திட்டம்" என்ற பெயரில் தமிழக விளைநிலங்களை அழிக்க நினைக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து, நெடுவாசலில் போராடி கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் அறைகூவல் கொடுத்திருந்தது. 

அதன்படி, நமது மாவட்டத்தில் சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு, நேற்று, 06.03.2017, நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அதற்கு இணையாக "இந்திய நாட்டின் கோயில்களான" பொது துறை நிறுவனத்தை காக்க போராடி வரும் சேலம் இரும்பாலை தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.  

ஆர்ப்பாட்டத்திற்கு, BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E . கோபால் தலைமை தாங்கினார். AIBSNLEA ,மாநில அமைப்பு செயலர் தோழர் மணிகண்டன், BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் விஜயன், ஹரிஹரன், தங்கராஜ், சண்முகம், சார்லஸ்பிரேம்குமார், ராமசாமி, பன்னீர்செல்வம், ஸ்ரீனிவாசன் ஆகியோர் விளக்க உரை வழங்கினார்கள். 

BSNLEU தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி சிறப்புரை வழங்கினார். 

BSNLEU மாவட்ட அமைப்பு செயலர் தோழர் செல்வம், கோஷங்கள் எழுப்ப, GM அலுவலக கிளை செயலர் தோழர் பாலகுமார் நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். இந்த ஆதரவு ஆர்ப்பாட்டத்தில், 100-க்கும் மேற்பட்ட
தோழர்கள் திரளாக கலந்து
கொண்டு சிறப்பித்தனர்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்