பொதுத்துறை வங்கிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்வாங்கிவிட்டு ஏப்பம் விட்ட பெரும்கார்ப்பரேட் நிறுவனங்களின் வராக்கடன்களை வசூலிக்க முயற்சிக்காத மத்திய அரசு, அந்த கடன்களுக்கு வங்கி ஊழியர்களை பலிகடாவாக்க முயற்சித்து வருகிறது. இதற்கு வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய நிதியமைச்சகம் 10 பொதுத்துறை வங்கிகளுக்கு சமீபத்தில் ஒரு தாக்கீது அனுப்பியுள்ளது. அதில், வங்கிகளில் உள்ள ஊழியர் மற்றும் அதிகாரிகள் இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலமாக பெற்றுவரும் சலுகை களை வெட்டிக் குறைக்கும் வகையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட பணித் துள்ளது.ஆந்திரா வங்கி, அலகாபாத் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, சென்ட்ரல் வங்கி, தேனா வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி மற்றும் யுனைடெட் வங்கி ஆகிய பத்து வங்கிகளுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.8586 கோடிமறுமுதலீடு வழங்குவதற்காக இந்த நிபந்தனையை விதிக்கிறது மத்திய நிதியமைச் சகம் என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்(பெபி) தமிழ்நாடு தலைவர் தி.தமிழரசு, பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் விவரித்திருப்பது வருமாறு:2015 ஆகஸ்ட் மாதம் ‘‘இந்திர தனுஷ்’’என்ற ஒரு திட்டத்தை மத்திய நிதியமைச்சகம் அறிவித்தது. “பேசல் 3 விதிகளை கடைப்பிடிக்க வேண்டுமென்றால் 2018-19 வாக்கில் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.1,80,000 கோடி ரூபாய் கூடுதல் மூலதனம் தேவைப்படும். அதில் ரூ.70,000 கோடியை மத்திய அரசு வழங்கும். மீதமுள்ள ரூ.1,10,000 கோடியை வங்கிகளே சந்தையிலிருந்து திரட்டிக் கொள்ள வேண்டும்” என்று கூறுகிறது அத்திட்டம். அதன்படி இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.10,000 கோடி பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமுதலீடாக ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளின் லாபம் குறைவதற்கு பிரதானமான காரணம், பெரு முதலாளிகளிடமிருந்து வரவேண்டிய வராக் கடன் வசூலிக்கப்படாமல் போவது தான். இதனை வசூலிக்க கறாரான சட்டம்இயற்ற வேண்டுமென்றும், வசதி இருந்தும்திருப்பிச் செலுத்தாதவர்களை கிரிமினல்குற்றவாளிகளாக அறிவித்து அவர்களிடமிருந்து கடனை வசூல் செய்ய வேண்டு மென்றும் வங்கித் தொழிற்சங்கங்கள் பல்லாண்டுகளாக போராடி வருகின்றன.2017 பிப்ரவரி 28ஆம் தேதி நடந்த வேலை நிறுத்தத்தில் கூட இது ஒரு முக்கிய மான கோரிக்கை.‘‘ஒத்துழைக்காத’’ கடனாளிகள்!மத்திய அரசாங்கம் அறிவித்த இந்திர தனுஷ் திட்டத்தில் வசதியிருந்தும் திருப்பிச் செலுத்தாத கடனாளிகளை மிகவும்மென்மையாக “ஒத்துழைக்காத கடனா ளிகள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு மேலும் கடன் வழங்க இந்திர தனுஷ் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வங்கிகள் கொடுக்கக்கூடிய கடனுக்கு கூடுதல் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.இவ்வாறு தொடர்ந்து மத்தியில் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்களின் கொள்கையின் காரணமாகவே பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் இயங்குகின்றன.
பொதுத்துறை வங்கிகள் பெரு முதலாளிகளுக்கு வழங்கும்கடன் கொள்கை கூட மாற்றியமைக்கப்பட வேண்டிய தருணம் இது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பொதுத்துறை வங்கி களின் இயக்குநர் குழுவில் ஊழியர்-அதிகாரிகள் சார்பாக நியமிக்கப்பட வேண் டிய இயக்குநர்கள் மத்திய அரசால் நியமிக் கப்படாமல் அவ்விடங்கள் காலியாகவே உள்ளன. இந்தப் பின்னணியில் பொதுத் துறை வங்கிகளின் நஷ்டத்திற்கு, அவற்றுக்குமறுமூலதனம் வழங்குவதற்கு வங்கி ஊழி யர்கள்-அதிகாரிகளை பலிகடா ஆக்குவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.மத்திய அரசாங்கத்தின் இத்தகைய அறிவிப்பை இந்திய வங்கி ஊழியர்சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. இதனை உடனடியாக திரும்பப்பெறவேண்டுமென்றும், பெரு முதலாளிகளிட மிருந்து வசூலிக்க வேண்டிய வராக் கடனை வசூலிக்கவும், கடன் கொள்கையில் மாற்றம் கொண்டு வரவும் மத்திய அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டு மென்றும் கேட்டுக் கொள்கிறது.
மார்ச் 31ஆம் தேதி அன்று பொதுத்துறை வங்கிகளின் மொத்த வராக் கடன் சுமார் ரூ.5,40,000 கோடி. 2015 மார்ச் மாதம் 31ஆம் தேதி அன்று இக்கடன் சுமார் ரூ.2,79,000 கோடியாக இருந்தது. கடந்த ஓராண்டில் மட்டும் வராக் கடன் சுமார் 93 சதவீதம் அதிகரித்துள்ளது.ட பொதுத்துறை வங்கிகள் மிக அதிக அளவில் லாபம் ஈட்டியும் கூட வராக் கடனை தள்ளுபடி செய்ததன் காரணமாகவும், அதற்காக ஒதுக்கீடு செய்வதன் காரணமாகவும் அவை நிகர நஷ்டத்தில் இயங்குகின்றன.ட 2016 மார்ச் மாதம் 31ஆம் தேதி பொதுத்துறை வங்கிகளின் ஆபரேட்டிங் லாபம் சுமார் ரூ.1,37,000 கோடி; வராக் கடனுக்கான ஒதுக்கீடு சுமார் ரூ.1,54,000 கோடி; நிகர நஷ்டம் சுமார் ரூ.17,000 கோடி.ட மொத்த வராக் கடனில் 70 சதவீதம் பெரு முதலாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய கடனாகும்.ட உச்சநீதிமன்றம் கூட இது குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இதை வசூல் செய்தாலே வங்கிகள் நல்ல லாபத்தில் இயங்கும். அதன்மூலம் மூலதனம் பெருகும். மத்திய அரசாங்கம் மூலதனம் கொடுக்க வேண்டிய தேவையே வராது.