எளம்பிள்ளை கிளையின் எட்டாவது மாநாடு, 28.03.2017 அன்று எளம்பிள்ளையில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு, தோழர் M . துரைசாமி தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக, சங்க கொடியை மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன், ஏற்றி வைக்க, கிளை செயலர் தோழர் செல்வகுமார் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன் மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, மாவட்ட செயலர் தோழர் E . கோபால் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.
வழக்கமான ஆய்படு பொருள் நிகழ்வுக்குப்பின், நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் தோழர் M . துரைசாமி தலைவராகவும், தோழர் A.கந்தசாமி செயலராகவும், தோழியர் C. லாவண்யா பொருளராகவும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் M . பன்னீர்செல்வம், G. நாராயணன்,
P . செல்வம், கிளை செயலர்கள் தோழர்கள் N . பாலகுமார் (GM அலுவலகம்), C . காளியப்பன், (MAIN) இளங்கோவன் (செவ்வை) ஆகியோர் வாழ்த்தி பேசினர். புதிய கிளை செயலர் தோழர்
A. கந்தசாமி, நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்தார். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு, சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்