Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, March 21, 2017

விரிவடைந்த மாவட்ட செயற்குழு - திருச்செங்கோடு - 19.03.2017


சேலம் மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு மற்றும் 8வது மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு முடித்துவைத்தல் கூட்டம், 19.03.2017 அன்று திருச்செங்கோட்டில் சிறப்பாக நடைபெற்றது. 

கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன், தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக, சங்க கொடியை, தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி செயலர் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே, ஏற்றி வைத்தார். தோழர் P . தங்கராஜு, மாவட்ட உதவி செயலர் அஞ்சலி உரை நிகழ்த்த, தோழர் M . ராஜலிங்கம், கிளை செயலர், திருச்செங்கோடு நகரம், வரவேற்புரை வழங்கினார்.  

தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். பின்னர், மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி அறிமுகவுரை வழங்கினார். 

தோழர் S . சுப்பிரமணியன், மாநில உதவி செயலர், திருப்பூர் சிறப்புரை வழங்கினார். தோழர் தம் உரையில் BSNL நிறுவனத்தின் இன்றைய நிலை, FORUM முடிவுகள், புதிய சம்பள பேச்சு வார்த்தை, 8வது அகில இந்திய மாநாடு, போராட்டங்கள், என பல விஷயங்களை விளக்கி பேசினார். 

8வது மாவட்ட மாநாட்டின் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டு ஏகமனதாக ஏற்கப்பட்டது. மாநாட்டின் வெற்றிக்காக கள பணியாற்றிய தோழர்கள் கௌரவிக்கப்பட்டனர். பின், 8வது மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு முடித்துவைக்கப்பட்டது. 

மாற்று சங்கத்திலிருந்து விலகி, நமது பேரியக்கத்தில் இணைந்த தோழர்கள் கௌரவிக்கப்பட்டனர். சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற தோழர்கள் கௌரவிக்கப்பட்டனர்.  

22.03.2017 அன்று சங்க அமைப்பு தினத்தை விமர்சையாக கொண்டாடுவது, மாநில மாநாடு கோட்டா, LJCM அஜெண்டாக்கள், பணி குழு கூட்டத்தை முறையாக நடத்த நிர்வாகத்தை வலியுறுத்துவது, கிளை கூட்டங்களை உடனடியாக நடத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. 

விரிவடைந்த செயற்குழுவில் 200க்கும் மேற்பட்ட  தோழர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். அன்பான உபசரிப்பு, அறுசுவை சைவ, அசைவ உணவு, கொடிகள், தோரணங்கள், வசதியான அறை, என நல்ல ஏற்பாடுகள் செய்த திருச்செங்கோடு நகர மற்றும் ஊரக கிளைகளுக்கு மாவட்ட சங்கத்தின் பாராட்டுக்கள். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்