நமது மாவட்ட சங்கத்தின் "கிளை செயலர்கள்" கூட்டம், 11.03.2017 அன்று திருச்செங்கோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, தலைமை தாங்கினார்.
திருச்செங்கோடு ஊரக கிளை செயலர் தோழர் K . ராஜன், அனைவரையும் வரவேற்றார். மாவட்ட உதவி செயலர் தோழர் M . சண்முகம் அஞ்சலி உரை நிகழ்த்தினார். மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, அறிமுக உரை நிகழ்த்தினார்.
விவாதத்தில் 21 தோழர்கள் பங்கு பெற்றனர். விவாதத்திற்கு பதில் அளித்து மாவட்ட செயலரின் தொகுப்புரைக்குப்பின், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. திருச்செங்கோடு கிளை செயலர் தோழர் M . ராஜலிங்கம் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். இடையில், TNTCWU மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர் வாழ்த்துரை வழங்கினார்.
மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் S . ஹரிஹரன், P . தங்கராஜ், S . ராமசாமி, M . பன்னீர்செல்வம், P.M. ராஜேந்திரன், P . செல்வம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்