Site Maintained by S. HARIHARAN, District Secretary

Monday, February 20, 2017

சேலம் TNTCWU தோழர்கள் டெல்லி நோக்கி பயணம்



BSNL ல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, சமவேலைக்கு சமசம்பளம், பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 22.02.2017 அன்று டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி பேரணி செல்ல, BSNLCCWF சங்கம் அறைகூவல் கொடுத்திருந்தது. 

அதன்படி, நமது மாவட்டத்திலிருந்து 10 தோழர்கள் குடும்பத்துடன், சேலம் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து, டில்லிக்கு பயணத்தை துவக்கினர். TNTCWU மாவட்ட செயலர் தோழர் பாஸ்கர் மற்றும் மாநில உதவி தலைவர் தோழர் செல்வம் தலைமையில், தோழர்கள், 19.02.2017 அன்று புறப்பட்டனர். 

BSNLEU சேலம் மாவட்ட சங்கம் சார்பாக மாவட்ட செயலர் தோழர் E . கோபால், தோழர்களை வாழ்த்தி, வழி அனுப்பி வைத்தார். போராட்டம் வெற்றி பெற சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்