Site Maintained by S. HARIHARAN, District Secretary

Sunday, December 11, 2016

கிளை செயலர்கள் கூட்டம் - முடிவுகள்



நமது மாவட்ட சங்கத்தின், "கிளை செயலர்கள்" கூட்டம், 10.12.2016, சனிக்கிழமை அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

கூட்டத்திற்கு தோழர் S. தமிழ்மணி, மாவட்ட உதவி தலைவர் தலைமை தாங்கினார். தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் அஞ்சலி உரை நிகழ்த்தினார். தோழர் S . ராமசாமி, மாவட்ட உதவி செயலர் அனைவரையும் வரவேற்றார். 

தோழர் E. கோபால், மாவட்ட செயலர் ஆய் படு பொருளை அறிமுகப்படுத்தி, விளக்க உரை வழங்கினார். பின்னர் நடைபெற்ற விவாதத்தில் 22 தோழர்கள் பங்கு பெற்றனர். 

15.12.2016 ஒரு நாள் வேலை நிறுத்தத்தை நமது மாவட்டத்தில் வெற்றிகரமாக்குவது, அகில இந்திய மாநாட்டு நிதியை முழுமையாக பூர்த்தி செய்ய ஏதுவாக ஒரு வாரம் செயற்குழு உறுப்பினர்கள் விடுப்பு எடுத்து வசூலை முடிப்பது, மாவட்ட மாநாடு வரவேற்ப்பு குழுவை 08.01.2017 அன்று சிறப்பு கூட்டம் நடத்தி முடித்து வைப்பது, உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. தோழர் M . சண்முகம், மாவட்ட உதவி செயலர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்