Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, October 28, 2016

துணை டவர் நிறுவனம் அமைக்கும் முயற்சியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்



BSNL நிறுவனம் பாடுபட்டுக் கட்டமைத்த 65000 செல் கோபுரங்களைத் தனியாகப்பிரித்து "துணை நிறுவனம்" என்ற பெயரில், தனியாருக்குத் தாரை வார்க்கத் திட்டமிடும் மத்திய அரசின், தனியார் ஆதரவுக்கொள்கையை, BSNLஐக் கூறு போடும், பொதுத்துறை விரோதக் கொள்கையை, எதிர்த்து  BSNL  அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் இணைந்த  நாடு தழுவிய கண்டன   ஆர்ப்பாட்டம், 27.10.2016 அன்று நடத்த மத்திய, மாநில FORUM கொடுத்ததிருந்தது. 

அதன் படி, சேலம் பொது மேலாளர் அலுவலகம் முன்பு, நேற்று 27.10.2016 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தோழர்கள் சம்பத், (SNEA), பாலகுமார் (BSNLEU) கூட்டு தலைமை தாங்கினர் . துணை பொது மேலாளர் நிர்வாகம் திரு. கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். 

AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் M . சண்முக சுந்தரம், SNEA மாவட்ட செயலர் தோழர் V .சண்முக சுந்தரம், BSNLEU மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். 

FORUM அமைப்பின் கன்வீனரும், BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் செயலுருமான தோழர் E. கோபால் கண்டன சிறப்புரை வழங்கினார். 

SNEA மாவட்ட பொருளர் தோழர் சேகர், நன்றி கூறி, ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார். மாவட்டம் முழுவதிலுமிருந்து சுமார் 200 ஊழியர்கள், அதிகாரிகள் (40 பெண்கள் உட்பட) கலந்து கொண்டனர்.

தோழமையுடன்,
E . கோபால்
கன்வீனர், FORUM