Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, October 27, 2016

சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்காதே!

Image result

மத்திய அரசுக்கு சிஐடியு மாநிலக்குழு வலியுறுத்தல்



தனிச்சிறப்பு பெற்றுள்ள சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சிக்கு சிஐடியு மாநிலக்குழு கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது.சிஐடியு மாநிலக்குழு கூட்டம் அக்டோபர் 23,24 தேதிகளில் மாநில தலைவர் அ.சவுந் தரராசன் தலைமையில் கொடைக்கானலில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாநில பொதுச்செய லாளர் ஜி.சுகுமாறன், உதவி பொதுச்செயலாளர்கள் வி.குமார், ஆர்.கருமலையான், கே. திருச்செல்வன் உட்பட மாநில நிர்வாகிகளும், மாநிலக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான ங்கள் பின்வருமாறு :தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து காவிரி நீர் முறையாக பங்கீடு செய்வதற்கு மாறாக உச்சநீதிமன்றத்தில் இந்த மேலாண்மை வாரியம் தேவையில்லை என்ற நிலைபாட்டை எடுத்துள்ள மத்திய அரசின் போக்கிற்கு சிஐடியு மாநிலக்குழு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

மார்ச் மாதம் கோட்டை முற்றுகை

குறைந்தபட்சம் மாத ஊதியம் ரூ.18,000,நல வாரிய பணப்பயன்களை இரட்டிப் பாக்கு, ஓய்வூதியம் குறைந்தபட்சம் மாதம் ரூ.3000, காண்ட்ராக்ட், கேம்ப் கூலி முறைக்குமுடிவு கட்டி சமவேலைக்கு சம ஊதியம், தொழிற்சங்க அங்கீகார சட்டம், அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பு, தொழிலாளர் சட்டங் களை கறாராக அமலாக்கு, தொகுப்பூதியம்-மதிப்பூதிய முறையைவிடுத்து காலமுறை ஊதியமாக்கு என்பன உள்ளிட்ட தமிழக உழைப்பாளிகளின் 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 2017 மார்ச் மாதத்தில் கோட்டை முற்றுகை போராட்டத் தை வெற்றிபெற செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

நலவாரியங்களில் பெரும் குளறுபடி

கட்டுமானம் உள்ளிட்ட 16 முறைசாரா நல வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ள80 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் களுக்கு வாரிய பணபயன்கள் வழங்குதில் பெரும் குளறுபடிகள் நடக்கின்றன.இதில் கட்டுமானம் மற்றும் ஆட்டோ நல வாரியங்களில் மட்டும் பணபயன் கிடைக் கிறது. எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கான துணைத்திட்ட நிதியை நல வாரியத்தில் பயன்படுத்துகிற முறையற்ற செயலில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. தமிழக அரசு இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, கல்வி உதவிநிதி, திருமண உதவி நிதி, மகப்பேறு நிதி, விபத்துநிதி, விபத்து - இயற்கை மரண நிதி மற்றும்ஓய்வூதியத்தை கோரியுள்ள தொழிலாளர் களுக்கு உரிய உதவி நிதியை அளித்திடவும், அதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யவும் சிஐடியு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தேங்கிக் கிடக்கும் தொழிலாளர் வழக்குகள்

தமிழகத்தில் சென்னை தொழில் தீர்ப்பா யம், சென்னை முதன்மை தொழிலாளர் நீதிமன்றம், சென்னை மூன்றாவது கூடுதல் தொழிலாளர் நீதிமன்றம், வேலூர் கூடுதல் தொழி லாளர் நீதிமன்றம், மதுரை தொழிலாளர் நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.இதனால் தொழிலாளர்களின் பொதுக்கோரிக்கைகள், பணிநீக்கம், சம்பளப்பிடித்தம், பின்னீட்டுச்சம்பளம் போன்ற தாவாக்கள் தீர்வின்றி தேங்கிக்கிடக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் கோரிக்கைகள், பிரச்சனைகளின் மீது ஜனநாயக ரீதியில்ஆலை வாயில்களில், பொது இடங்களில்ஆர்ப்பாட்டங்கள் நடத்த காவல்துறை அனு மதிக்காத போக்கிற்கு சிஐடியு மாநிலக்குழு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.திருச்சி, திருவள்ளூர், நீலகிரி, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் தொழிலாளர் களின் போராட்டங்களுக்கு எதிரான நிலையை காவல்துறை எடுத்துள்ளது. இது முதலாளிக்கு ஆதரவான நிலையைத்தான் காட்டுகிறது.

ரேசன் அரிசி விலை உயர்வு

மத்திய அரசு உணவு பாதுகாப்புச் சட்டத்தை காரணம் காட்டி, தமிழகத்திற்கு வழங்கும்அரிசி விலையை உயர்த்தியுள்ளது. வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களின் அரிசியை ரூ.8.30 லிருந்து ரூ.22.54 ரூபாயாக உயர்த்தி உள்ளது. இதனால் தமிழக அரசுக்கு ரூ.3 ஆயிரம் கோடி கூடுதலாக செலவாகும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் பொதுவினியோகத்திட்டத்தை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மத்திய அரசுக்குசிஐடியு மாநிலக்குழு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.மாநில பொதுத்துறை நிறுவனங்களில் கேந்திரமான நிறுவனங்களாக உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் ஊதிய உடன்பாடு காலம்முடிவடைந்து பல மாதங்களாகியும் புதியஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப் படாத நிலை நீடிக்கிறது. இதில் தமிழகஅரசு உடனடியாக தலையிட்டு தொழிற் சங்கங்களை அழைத்து பேசி சுமூக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சிஐடியு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.

தனியாருக்கு தாரை வார்க்காதே!

உலகத்தரம் வாய்ந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தயாரிப்பதில் சேலம் உருட்டாலை தனி சிறப்பை பெற்றுள்ள நிறுவனமாகும். இந்த நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ள தற்குசிஐடியு மாநிலக்குழு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. தொடர்ந்து லாபத்தை ஈட்டி வரும் நிலையிலும், இட ஒதுக்கீடு முறையில் கிராமப்புற ஏழை எளி யோர் வேலைவாய்ப்பை பெற்று வரும் நிலையிலும் உள்ள இந்த நிறுவனத்தை விற்கும்முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டு மென சிஐடியு மாநிலக்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.இந்த தனியார்மய முயற்சியை எதிர்த்து அனைத்து ஜனநாயக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டுமென சிஐடியு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.

Image result for theekkathir