ஓமலூர் கிளை சங்கத்தின் 8வது கிளை மாநாடு, ஓமலூரில் 22.10.2016 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர் C . ராமசாமி, தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக, தோழர் கௌசல்யன் சங்க கொடியை ஏற்றினார். தோழர் செல்வகுமார் அஞ்சலியுறை வழங்கினார். தோழர் கௌசல்யன் கிளை செயலர் அனைவரையும் வரவேற்றார்.
தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி செயலர் முறைப்படி மாநாட்டை துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள், M . பன்னீர்செல்வம், R . வேலு, கிளை செயலர்கள் தோழர்கள் P . செல்வம் (கொண்டலாம்பட்டி) வெங்கடேசன் (மெய்யனுர் OD) இளங்கோவன் (உதவி செயலர், செவ்வை) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாநாட்டு சிறப்புரை வழங்கினார். ஆண்டறிக்கை, வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஏற்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், தோழர்கள் கௌசல்யன், செல்வகுமார், காட்டுராஜா ஆகியோர் தலைவர், செயலர், பொருளாராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தோழர் செல்வகுமார் புதிய கிளை செயலர் நன்றி கூறி, மாநாட்டை முடித்து வைத்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்