மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை எதிர்த்து, "உலகின் மாபெரும் வேலை நிறுத்தம்" நாளை 02.09.2016 அன்று நடக்க இருக்கிறது. இந்திய தொழிலாளர்கள் போராட்ட களம் காண தயாராகி விட்டார்கள். நமது BSNL ஊழியர்களும் வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு பெற தயாராக உள்ளனர். அனைவருக்கும் BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
மத்திய அரசின் கடைசி நேர பசபல் வார்த்தைகளை ஏற்க அனைத்து மத்திய சங்கங்களும் மறுத்து விட்டன. வேலை நிறுத்தம் உறுதி என பிரகடனம் படுத்தி விட்டனர். 20 கோடி தொழிலாளர்கள் பங்கு பெற உள்ள தேச பக்த வேலை நிறுத்தம் நமது மாவட்டத்தில் 100 சதம் வெற்றி பெற, கிளை செயலர்கள் கடைசி நேர உழைப்பைச்செலுத்த வேண்டும். கிளைகளில், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கு பெற்று, மீண்டும் ஒரு வரலாற்றுச்சாதனை படைப்போம்.
போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்டச்செயலர்