Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, August 28, 2016

PLI, போனஸ் கமிட்டி கூட்டம்

 Image result for போனஸ்


24-08-2016 அன்று டெல்லியில் PLI, போனஸ் குழுக்கூட்டம் நடைபெற்றது. நிர்வாகத்தரப்பில், திருமதி. மது அரோரா,GM (Estt), திரு. D. சக்கரவர்த்தி,GM (Pers), திருமதி. ஆதி ஷரன், GM ( EB ), திரு. A .M .குப்தா, GM (SR) ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஊழியர் தரப்பு சார்பாக, நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, துணை பொது செயலர் தோழர் ஸ்வ பன் சக்கரவர்த்தி, NFTEBSNL பொது செயலர் மற்றும் பொருளர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில், வருவாயை மட்டுமே அளவீடாக கொண்டு போனஸ் வழங்க நிர்வாகம் முன்மொழிவு வழங்கியது. அதாவது 2014-15ம் ஆண்டு வருவாய் 1,100 கோடிஉயர்ந்துள்ளது, ஆகவே ஒவ்வொரு கோடி ரூபாய்களுக்கு ஒரு ரூபாய் தருவது, அதன் படி, 2014-15 போனஸாக ரூ.1100 வழங்குவதாகவும் கூறினர். 

நமது சங்கம் இந்த முன்மொழிவை ஏற்க மறுத்தது. காரணம், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில், ஊழியர்களின் உழைப்பால் வருவாயில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, எனவே, நியாயமான தொகையினை PLI ஆக அறிவிக்க வேண்டும் என நாம் கோரினோம். 

முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அடுத்த கூட்டம் 05.09.2016 அன்று நடைபெறும்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்