முதல் நிகழ்ச்சியாக தேசிய கொடியை தோழர் N . செல்வராஜ், மாவட்ட உதவி தலைவர் ஏற்றி வைக்க, சங்க கொடியை தோழர் கருப்பண்ணன், (ராசிபுரம்), விண்ணதிரும் கோஷங்களுக்குக்கிடையே ஏற்றி வைத்தார்.
தோழர் P . தங்கராஜ், மாவட்ட உதவி செயலர் அஞ்சலி உரை நிகழ்த்த, தோழர் N . செல்வராஜ், மாவட்ட உதவி தலைவர் அனைவரையும் வரவேற்றார்.
தமிழ் மாநில சங்க அமைப்பு செயலர் தோழர் M . பாபு, செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து, துவக்க உரை வழங்கினார். 02.09.2016 ஒரு நாள் வேலை நிறுத்த நோக்கம், நமது சாதனைகள், ஊழியர் பிரச்சனைகள் மீது நாம் நடத்திய இயக்கங்கள் என பல விஷயங்களை விளக்கி பேசினார்.
ஆய்படு பொருள் அறிமுகப்படுத்தப்பட்டு, ஏற்புக்கு பின், தோழர்
E . கோபால், மாவட்ட செயலர் செயற்குழு நோக்கத்தையும், ஆய்படு பொருளையும் அறிமுக படுத்தி உரை நிகழ்த்தினார்.
தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S . சுப்ரமணியன், சிறப்புரை வழங்கினார். அவர்தம் உரையில், 7வது சரிபார்ப்பு தேர்தலில் நாம் பெற்ற மகத்தான வெற்றி, மத்திய செயற்குழு முடிவுகள், வேலை நிறுத்தம், மத்திய அரசின் ஊழியர் விரோத, மக்கள் விரோத தாராளமய கொள்கைகள், என பல விஷயங்களை சுட்டி காட்டி, சிறப்புரை வழங்கினார்.
தோழரின் உரைக்கு பின், மாவட்ட செயலர் அகில இந்திய மாநாட்டிற்கான நன்கொடை கோரிக்கையை முன் மொழிந்தவுடன், 30 தோழர்கள் உடனடியாக நன்கொடை வழங்க உறுதி அளித்தனர். அவர்கள் உறுதி அளித்த தொகை ரூ. 1,56,000 என்பது. சங்கத்தின் மீதான கொள்கை பற்றையும், நம்பிக்கையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது.
உணவு இடைவேளைக்கு பின், தோழர் C . பாஸ்கர், மாவட்ட செயலர் TNTCWU வாழ்த்துரை வழங்கினார். ஆத்தூர் செயற்குழுவிக்கு பின், ஓய்வு பெற்ற தோழர்கள் கௌரவப்படுத்த பட்டனர்.
பின்னர், கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் என 32 தோழர்கள் விவாதத்தில் பங்கு பெற்றனர். விவாதத்திற்கு பதிலளித்து மாவட்ட செயலர் தோழர் E . கோபால், தொகுப்புரை வழங்கினார். இறுதியாக, ராசிபுரம் கிளை செயலர் தோழர் R . கோவிந்தராஜ், நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
அன்பான உபசரிப்பு, சுவையான அசைவ மற்றும் சைவ உணவுகள், அமைதியான இடம், கொடிகள் தோரணங்கள் என சிறப்பான ஏற்பாடை செய்த ராசிபுரம் கிளையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
தீர்மானங்கள்
02. அகில இந்திய மாநாட்டீற்கு மாநில சங்கத்தால் கொடுக்கப்பட்ட கோட்டாவை பூர்த்தி செய்வது.
03. கேந்திர பங்கு விற்பனை முடிவை எதிர்ப்பது,
04. மேற்கு வங்க திருணாமூல் குண்டர்களின் அராஜகத்தை எதிர்ப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
முடிவுகள்
01. 02.09.2016 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவது.02. அகில இந்திய மாநாட்டு நன்கொடையாக ஒவ்வொரு உறுப்பினரிடமும் ரூ. 1500, மாவட்ட மாநாடு நன்கொடையாக ரூ. 500 வசூலிப்பது.
03. மாவட்ட மாநாட்டை அக்டோபர் இறுதி வாரம் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் மாநில சங்க தேதி படி நடத்துவது
04. கிளை மாநாடுகள் நடத்தி முடிக்காத கிளைகளில் மாநாடுகளை நடத்தி முடிப்பது.
05. வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க வருகிற 30 மற்றும் 31 தேதிகளில் கிளைகளுக்கு சுற்று பயணம் மேற்கொள்வது,
உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்