Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, July 30, 2016

SC/ST ஊழியர்களுக்கான தேர்வு மதிப்பெண் தளர்வு


இலாக்காத் தேர்வெழுதி குறிப்பிட்ட மதிப்பெண்கள் இல்லாததால், தோல்வியுற்ற SC/ST தோழர்களின் தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்யவும்,   SC/ST தோழர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களைக் குறைக்கக்கோரியும் நமது சங்கம் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தது. 

இப்பிரச்சினை  நாடாளுமன்றக்குழுவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. தற்போது, இப்பிரச்சினை தீர்விற்காக அமைக்கப்பட்ட குழு தனது பரிந்துரையை அளித்துள்ளது. 

அதன்அடிப்படையில், நமது BSNL நிர்வாகம் புதிய உத்தரவு வெளியிட்டுள்ளது. உத்தரவின் படி, 

1. இலாக்காத்தேர்வில் தேர்ச்சி பெற SC/ST தோழர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களைத் தளர்த்தி உத்திரவிட்டுள்ளது.

2. ஊழியர்கள் பதவிகளுக்கிடையேயான  TM,TTA மற்றும் UDC தேர்வுகளுக்கும்ஊழியர்களில் இருந்து அதிகாரிகள் பதவிகளுக்கான JAO,JTO,PA மற்றும்  இந்தி அதிகாரி தேர்வுகளுக்கு இது பொருந்தும்.

03. 02/12/2014க்குப்பின் அறிவிப்பு செய்யப்பட்ட தேர்வுகளுக்கு இந்த உத்திரவு பொருந்தும்.

04. இந்த உத்தரவின்படி JTO, JAO தேர்வுகளுக்கு 30 என்று நிர்ணயிக்கப்பட்ட கூட்டு மதிப்பெண் 26 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்