Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Saturday, July 2, 2016

ஊழியர் பிரச்சனைகளை முன்னிலை படுத்தி கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்




ஊழியர் பிரச்சனைகள் மீது BSNL இயக்குனர் குழுவின் எதிர்மறை அணுகுமுறையை எதிர்த்து, 05.07.2016 அன்று கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த, நமது மத்திய சங்கம் அறை கூவல் கொடுத்துள்ளது. UNITED FORUM OF BSNL UNIONS சார்பாக இந்த போராட்ட அறைகூவல் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஊழியர்களின் நீண்ட நாள் ,கோரிக்கையான, E1 சம்பள வீகிதம், நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதிய பங்கீடு, 01.01.2007 க்கு பின் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களில் விடுபட்டவர்களுக்கு ஒரு ஆண்டு ஊதிய உயர்வு, காசுவல் ஊழியர்களுக்கு பணி கொடை உள்ளிட்ட கோரிக்கைகள் பிரதான படுத்தப்பட்டுள்ளது. 

பல கோரிக்கைகள் நிர்வாக குழுவின் ஏற்புக்கு பின்னரும், இயக்குனர் குழுவின் ஒப்புதல் கிடைக்காமல் நிலுவையில் உள்ளது. 

இந்த அவல நிலையை எதிர்த்து, நாடு முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, நமது மாவட்டத்தில், 05.07.2016, செவ்வாய் கிழமை அன்று சேலம் MAIN  தொலைபேசி நிலையத்தில், மாவட்ட தலைவர் தோழர் S. தமிழ்மணி தலைமையில், கருப்பு அட்டை அணிந்து, மாலை 5 மணிக்கு போராட்டம் துவங்கும். 

மாவட்டம் தழுவிய இந்த போராட்டத்திற்கு, கிளை செயலர்கள் தோழர்களை பெரு வாரியாக திரட்டி, போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.

போராட்ட வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
விரிவான மத்திய சங்க கடிதம் காண இங்கே சொடுக்கவும்