Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, July 20, 2016

துவங்கியது மத்திய செயற்குழு - அண்ணல் அம்பேத்கர் - 125 - கருத்தரங்கம்

Image result for bsnleuImage result

நமது மத்திய சங்கத்தின் 3 நாள் செயற்குழு, 18.07.2016 அன்று புதுடில்லியில், எழுச்சியுடன் துவங்கியது. தோழர் பல்பீர் சிங், அகில இந்திய தலைவர் தலைமை தாங்க, நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, அனைவரையும் வரவேற்று பேசினார். CITU அகில இந்திய தலைவர் தோழர் A .K .பத்மநாபன், செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து, சிறப்புரை வழங்கினார். தோழமை சங்க நிர்வாகிகள், தோழர் அனுப் முகர்ஜி, பொது செயலர், SNATTA, தோழர் சுரேஷ் குமார், பொது செயலர், BSNLMS ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பின்னர், பொருளாய்வு குழு தொடர்ந்து நடைப்பெற்றது. 

இரண்டாம் நாளான நேற்று, 19.07.2016, மாலை 4 மணிக்கு செயற்குழுவின் ஒரு பகுதியாக " டாக்டர் B.R .அம்பேத்கர் - 125" சிறப்பு கருத்தரங்கம் நடைப்பெற்றது. நமது புரவலர் தோழர் V.A.N. நம்பூதிரி தலைமை தாங்க, துணை பொது செயலர் தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி வரவேற்புரை வழங்கினார். அகில இந்திய தலைவர் தோழர் பல்பீர் சிங், சட்ட மேதை அம்பேத்கர் அவர்களின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தலீத் லோஷன் முக்தி மோர்ச்சா அமைப்பை சார்ந்த தோழர் மமதா, CITU பொது செயலர் தோழர் தபன்சென், உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு கருத்தரங்கில் அரிய பல கருத்துக்களை வழங்கினர். கருத்தரங்கில், கார்ப்பரேட் அலுவலம், NTR, ஹரியானா, UP (மேற்கு), ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் பங்கேற்றனர்.

மூன்றாவது நாள் நிகழ்வுகள் துவங்கி, நடை பெற்று வருகிறது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்  
முதல் நாள், இரண்டாம் நாள் BR125 படங்கள் காண இங்கே சொடுக்கவும்