மெய்யனுர் OD கிளை செயலர் தோழர் P . சம்பத் அவர்கள் 30.06.2016 அன்று, இலாக்கா பணி நிறைவு செய்வதையொட்டி, 29.06.2016 அன்று சேலம் மெய்யனுர் தொலைபேசி நிலையத்தில் தோழருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது. மெய்யனுர் தோழர் I. சேட் அவர்களையும் இணைத்து விழா நடத்தப்பட்டது.
கூட்டத்திற்கு மாவட்ட உதவி தலைவர் தோழர் M . விஜயன் தலைமை தாங்க, மாவட்ட அமைப்பு செயலர் தோழர் R . வேலு அனைவரையும் வரவேற்றார்.
தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S. தமிழ்மணி முதலில் பாராட்டு பேருரை வழங்கினார். பின்னர், BSNLEU முன்னாள் தமிழ் மாநில உதவி செயலர் தோழர் M . நாராயணசாமி சிறப்புரை வழங்கினார்.
மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாவட்ட சங்கம் சார்பாக பாராட்டுரை வழங்கினார்.
பல தோழர்களின் கௌரவிப்புக்கு பின், தோழர் I. சேட் அவர்களும் தோழர் P . சம்பத் அவர்களும் ஏற்புரை வழங்கினார்கள். மெய்யனுர் OD கிளை தலைவர் தோழர் S. சேகர் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.
மாவட்டம் முழுவதலுமிருந்து ஊழியர்கள், அதிகாரிகள், மாற்று சங்க தோழர்கள், தோழர் சம்பத்தின் உறவினர்கள், நண்பர்கள் என சுமார் 250 பேர் விழாவில் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.
அறுசுவை அசைவ, சைவ உணவுகள், நேர்த்தியான ஏற்பாடுகள், அன்பான உபசரிப்பு என அசத்திய மெய்யனுர் கிளை தோழர்களை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்