போராட்டதிற்கு மாவட்ட பொருளர் தோழர் C . செந்தில் குமார், தலைமை தாங்கினார். தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் போராட்டத்தை துவக்க வைத்து உரை வழங்கினார்.
மாவட்ட உதவி செயலர்கள் தோழர்கள் P . தங்கராஜ், P . கனகராஜ், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
பின்னர், தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி, கண்டன சிறப்புரை வழங்கினார். அவர் தம் உரையில் போராட்ட நோக்கம், கோரிக்கைகள், கூட்டணி சங்கங்களுடன் இணைந்த செயல்பாடு, போனஸ் வரலாறு, இரண்டாவது சங்கத்தின் துரோகம் உள்ளிட்ட விஷயங்களை விளக்கி பேசினார்.
மாவட்டம் முழுவதுளுமிருந்து சுமார் 70 தோழர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இறுதியாக, மாவட்ட அமைப்பு செயலர் தோழர்
M . பன்னீர் செல்வம் நன்றி கூறி போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
















