சேலம் மாவட்ட சங்கத்தின் செயற்குழு, 16.03.2016 அன்று மாவட்ட சங்க அலுவலகத்தில், சிறப்பாக நடைப்பெற்றது.
மாவட்ட தலைவர் தோழர் S . தமிழ்மணி, தலைமை தாங்க, மாவட்ட உதவி தலைவர் தோழர் M . விஜயன், அஞ்சலி உரை நிகழ்த்த, மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M . பன்னீர்செல்வம், அனைவரையும் வரவேற்றார்.
தலைவர் அவர்களின் தலைமை உரைக்கு பின், அய்படு பொருள் சமர்கிக்கபட்டு, ஏற்று கொள்ளப்பட்டது.
மாவட்ட செயலர் தோழர் E . கோபால், அய்படு பொருள் மீது விவாத குறிப்பை முன்மொழிந்து, கூட்ட நோக்கம், நமது உடனடி கடமைகள், விரிவடைந்த மத்திய, மாநில செயற்குழு முடிவுகள், SWAS அமுலாக்கம், அமைப்பு நிலை, 7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் உள்ளிட்ட விஷயங்களை விளக்கி பேசினார்.
பின்னர், கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் 37 தோழர்கள் விவாதத்தில் பங்கு பெற்றனர். நடுவில், TNTCWU மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர், வாழ்த்துரை வழங்கினார்.
எதிர் வரும் 7வது சரிபார்ப்பு தேர்தலில் சேலம் மாவட்டத்தில் வெற்றி பெறுவது, உடனடியாக பூத் கமிட்டி அமைப்பது, கிளை கூட்டங்கள் நடத்துவது, வாக்காளர்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரிப்பது, 21.03.2016 பொது செயலர் கலந்து கொள்ளும் சிறப்பு கூட்டத்தில் பெறும் திரளாக பங்கேற்பது, 05.04.2016 அன்று விரிவடைந்த மாவட்ட செயற்குழுவை சேலத்தில் நடத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கபட்டது.
ஆழமான விவாதம், துல்லியமான கணிப்புகள், யதார்த்தமான திட்டமிடல், நேர்த்தியான வேலை பங்கீடு என செயற்குழு சிறப்பாக இருந்தது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்