Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, January 20, 2016

FORUM சார்பாக பாண்டியில் மாநிலம் தழுவிய கருத்தரங்கம்

 


தமிழ் மாநில FORUM சார்பாக, புதுச்சேரியில், 19.01.2016 அன்று மாநிலம் தழுவிய சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. "புன்முறுவலுடன் சேவை செய்வோம்" என்ற விஷயத்தை மையபடுத்தி, அகில இந்திய FORUM முடிவின்  அடிப்படையில், கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

மாநிலம் முழுவதுலுமிருந்து, சுமார் 800 சார்பாளர்கள் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கிற்கு, தோழர் R . பட்டாபிராமன், தலைவர் FORUM தலைமை தாங்கினார். FORUM அமைப்பின் தமிழ் மாநில கண்வீனரும், BSNLEU அகில இந்திய உதவி செயலுருமான தோழர் S . செல்லப்பா கருத்தரங்கத்தின் நோக்கத்தை விளக்கி முன்னுரை வழங்கினார். 

BSNLEU அகில இந்திய பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, NFTEBSNL அகில இந்திய பொது செயலர் தோழர் சந்தேஷ்வர் சிங், SNEA அகில இந்திய பொது செயலர் தோழர் செபஸ்டின், AIBSNLEA அகில இந்திய தலைவர் தோழர் P . வேணு கோபால் மற்றும் அனைத்து சங்க மாநில செயலர்கள் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள். 

நிர்வாக தரப்பில், தமிழ் மாநில தலைமை பொது மேலாளர் திருமதி. பூங்குழழி, முதன்மை பொது மேலாளர் (நிதி) திரு. G . ரவி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு விளக்க உரை வழங்கினார்கள். 

கருத்தரங்கில், கலந்து கொண்ட ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளின் உரை பயன் உள்ளதாக இருந்தது.

தோழமையுடன், 
E . கோபால்,
மாவட்ட செயலர் 

கூடுதல் படங்கள்  காண இங்கே சொடுக்கவும்