Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, November 18, 2015

BSNL செயல் லாபம் 2014-15ம் ஆண்டில் ரூ.672 கோடி - CMD தகவல்

Image result for anupam shrivastava bsnl
நமது CMD திரு. அனுபம்ஸ்ரீவஸ்தவா, நேற்று,17.11.2015 செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், BSNL நிறுவனம் 2014-15 ம் ஆண்டில் செயல் லாபம் ரூ 672 கோடி ஈட்டியுள்ளதாக, தகவல் தெரிவித்துள்ளார். பல பத்திரிக்கைகளில் அவருடைய பேட்டி இன்று வெளிவந்துள்ளது.

அவருடைய, பேட்டியில் மேலும் தெரிவிக்கபட்டுள்ள தகவல்கள்

1. சேவைகள்  மூலம் வரும் வருவாய் 4.16 சதம் அதிகரித்து, ரூ. 27,242 கோடியாக உள்ளது. சென்ற நிதி ஆண்டில் இது ரூ.26,153 கோடி தான் .

2. இந்த ஆண்டு செயல் லாபம் ரூ. 672 கோடி. சென்ற, 2013-14ம்  ஆண்டில் இதே பிரிவில் (இயக்க செலவு)ரூ. 691 கோடி நஷ்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 

3. நிகர நஷ்டம் 8,234 கோடி. 2,000 கோடி தேய்மான கணக்கு.

4. 10000 ஊழியர்கள் பனி ஓய்வில் சென்றதால், நிர்வாக செலவு குறைந்துள்ளது. 

5. BSNL நிறுவனம் 2018-19 ஆண்டில் லாபமீட்டும் நிறுவனமாக மாறும். 

6. சென்ற 2 ஆண்டில், 25000 செல் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம், BSNL நிறுவனத்தின் கோபுரங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டிவிட்டது. 

7. விரிவாக்கதிற்காக, இந்த நிதி ஆண்டில், 7000 கோடி செலவு செய்யப்படும். 

8. 4G சேவை மார்ச் மாதத்திற்குள் குறிப்பிட்ட சில நகரங்களில் தொடங்கப்படும்.

9. தற்போது, 400 Wi -Fi தளங்கள் உள்ளது. அது 40,000 ஆக உயர்த்தப்படும். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்