நமது மாவட்டத்தின் "கிளை செயலர்கள்" கூட்டம், 25.08.2015 அன்று நமது சங்க அலுவலகத்தில் நடை பெற்றது.
கூட்டத்திற்கு தோழர் V . சின்னசாமி, மாவட்ட உதவி தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் தோழர் E . கோபால், விவாத குறிப்பை அறிமுக படுத்தி சிறப்புரை வழங்கினார்.
22 கிளை செயலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, விவாதத்திலும் பங்கு பெற்றனர்.
TNTCWU மாவட்ட செயலர் தோழர் C . பாஸ்கர், BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் ஹரிஹரன், சண்முகம், தங்கராஜு, பன்னீர் செல்வம், சார்லஸ் பிரேம் குமார், ஆகியோரும் விவாதத்தில் பங்கு பெற்றனர்.
கூட்டத்தில் கிழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
1. 2015 செப்டம்பர் 2 ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது.
2. சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சங்கங்களையும் /அமைப்புகளையும் அனுகி அதரவு கோருவது.
3. ஒருங்கிணைப்பு குழு முடிவு அடிப்படையில் பிரசார பயணம் மேற்கொள்வது.
4. அனைத்து கிளைகளிலும் கிளை கூட்டங்கள் உடனடியாக நடத்துவது.
5. அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கத்தை 29.08.2015 க்குள் முடிப்பது.
6. ஒருங்கிணைப்பு குழு முடிவின்படி, அனைத்து கிளைகளிலும் மேளாக்கள் நடத்துவது.
தோழமையுடன்
E . கோபால்,
மாவட்ட செயலர்