விரிவடைந்த மாவட்ட செயற்குழு, ஓய்வு பெற்ற தோழர்களை கௌரவித்தல், தோழர் ராமசாமி பணி நிறைவு பாராட்டு விழா என மூப்பெரும் விழாவாக நமது விரிவடைந்த செயற்குழு ஒய்யாரமாக ஓமலூரில் 29.03.2015 அன்று நடைபெற்றது.
தோழர் S. தமிழ்மணி, மாவட்ட தலைவர் தலைமை தாங்க, மாநில செயலர் தோழர் A. பாபு ராதா கிருஷ்ணன் முன்னிலை வகிக்க, சங்க கொடியை விண்ணததிரும் கோஷங்களுக்கு கிடையே, தோழர் C. ராமசாமி, கிளை தலைவர், ஓமலூர் ஏற்றி வைத்தார். தோழர் N கௌசல்யன், கிளை செயலர், ஓமலூர் வரவேற்புரை வழங்கினார்.
அஞ்சலி நிகழ்வுக்கு பின், ஆய்ப்படு பொருள் ஏற்கப்பட்டு, தலைமை உரைக்கு பின், மாவட்ட செயலர் தோழர் E கோபால், துவக்க உரை வழங்கினார். செயற் குழு நோக்கத்தை விளக்கி பேசினார்.
மாநில மாநாட்டுக்கு பின் முதல் முறையாக நமது மாநில செயலர் தோழர் A பாபு ராதா கிருஷ்ணன் நமது மாவட்டத்துக்கு வருகை புரிந்ததற்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, கௌரவிக்கப்பட்ட பின் மாநில செயலர் சிறப்புரை வழங்கினார்.
மாநில செயலர் தம் உரையில்,
கையெழுத்து இயக்கத்தில் நமது
மாவட்டம் புரிந்த சாதனையை பாராட்டினார். இன்றைய தேச நிலைமை, BSNL நிதி ஆதாரம், வேலை நிறுத்த நோக்கங்கள், கடந்த 10 ஆண்டுகளில் ஊழியர்களுக்கு நாம் பெற்று தந்த சலுகைகள், அதிகாரிகள் ஊழியர்கள் ஒற்றுமை என பல விசயங்களை விளக்கி பேசினார். ஊழியர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்.
பின்னர், பணி நிறைவு செய்த நமது 13 தோழர்கள் எழுச்சியுடன் கௌரவிக்கப்பட்டனர். தோழர் ராமசாமி இயக்க சேவையை பாராட்டி பல கிளை செயலர்கள், நிர்வாகிகள் பேசினார். பல கிளைகள், தோழர்கள் தோழரை கௌரவ படுத்தினர்.
தோழர் ராமசாமி ஏற்புரை வழங்க, மாவட்ட சங்க நிர்வாகிகள் விவாதத்தில் பங்கு பெற்றனர். கூட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். தோழர் M. சண்முகம், மாவட்ட உதவி செயலர் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.
அறுசுவை உணவு, அன்பான கவனிப்பு, அமைதியான இடம் என விரிவான ஏற்பாடுகள் செய்த ஓமலூர் கிளையை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மாவட்ட செயற்குழு முடிவுகள்:
1. சேலம் மாவட்ட FORUM முடிவுகள் படி, 2 நாள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது.
2. வேலை நிறுத்த ஆயுத்த கிளை கூட்டங்கள் அனைத்து கிளைகளிலும் நடத்துவது.
3. ஆத்தூர், மேட்டூர், ராசிபுரம், திருச்செங்கோடு, நாமக்கல் போன்ற முக்கிய மையங்களில் சிறப்பு கூட்டங்கள் நடத்துவது.
4. வேலை நிறுத்தத்தில் ஊழியர்களை முழுமையாக பங்கேற்க வைக்க, ஊழியர்க்ளை அவர்களின் இல்லத்தில் சென்று சந்தித்து, பிரச்சார படுத்துவது.
5. FORUM ஒப்புதலுக்கு பின் சேலத்தில், மாநில தலைவர்களை வைத்து கருத்தரங்கம் நடத்துவது.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்