Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, March 5, 2015

மங்காத ஸ்டாலினின் புகழ்! இன்று மாவீரர் ஸ்டாலின் நினைவு தினம்!

Image result for stalin

“வரலாற்றில் மிகவும் கொலைவெறி பிடித்த சர்வாதிகாரிகளில் ஒருவர் ஸ்டாலின்”இவ்வாறு கூறுகிறது பிபிசி நிறுவனத்தின் இணையப் பக்கம்! எந்த ஒரு நிகழ்வையும் ஆய்வு செய்து வெளியிடும் தன்மைகொண்டது பிபிசி நிறுவனம். அத்தகையஊடகம் ஸ்டாலின் குறித்து இன்னமும் அவதூறு கூறிக் கொண்டிருக்கிறது எனில்ஸ்டாலினை முதலாளித்துவவாதிகள் எவ்வளவு வெறுக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்!
இரண்டாம் உலகப்போரில் ஸ்டாலின் பங்கு
சோவியத் மீது தாக்குதல் தொடங்கிய பொழுது “உலகின் மிகப் பெரியஇராணுவத் தாக்குதல் இது!” என்றான் இட்லர்! “ஒரே மாதத்தில் ரஷ்யாவின்எதிர்ப்பு முடிந்துவிடும்” என்றனர் பிரிட்டன், அமெரிக்க தலைவர்கள். ஏற்கெனவே பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் பலபகுதிகள் வீழ்ந்துவிட்டன. இட்லரை தோற்கடிக்க முடியும் எனும் நம்பிக்கை அவர்களுக்கு இருக்கவில்லை. இரு மாதங்களுக்கு பிறகு பிரிட்டன் பிரதமர் சர்ச்சில் வானொலியில் “ரஷ்யர்களின் மகத்தான அர்ப்பணிப்பும் அவர்களின் இராணுவத் திறமையும் ஈடு இணையற்றதாக உள்ளது” என்று கூறினார்.1941ம் ஆண்டு ஆகஸ்டு 20ம் நாள் ரேமண்ட் கிளாப்பர் எனும் நிருபர் செய்தி அனுப்பினார்:
“ரஷ்யா வெற்றிக்கான புதிய பாதையை திறந்துவிட்டுள்ளது. இட்லருக்கு எதிராக இவ்வளவு பெரிய மனிதசக்தி விருப்பத்துடன் போரில் ஈடுபட்டுள்ளது இதுவே முதல்முறை”ஆம்! ஸ்டாலின் கூறினார். “இது இட்லர் படைகளுக்கும் சோவியத் படைகளுக்கும் நடக்கும் யுத்தம் அல்ல; மாறாக இட்லரின் படைகளுக்கும் சோவியத்தின் அனைத்து மக்களுக்கும் நடக்கும் போர்” எனக் குறிப்பிட்டார். 20கோடி மக்களும் ஸ்டாலின் தலைமையில் போரில் குதித்தனர். இது இட்லர் மட்டுமல்ல; முதலாளித்துவத் தலைவர்களும் புரிந்துகொள்ளத் தவறினர். ஸ்டாலின் மேலும் கூறினார்: “(இட்லரிடமிருந்து) விடுதலைக்காக நடக்கும் எங்களது இந்த யுத்தம் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க மக்களின் விடுதலைக்காக நடக்கும் யுத்தத்துடன் ஒன்றிணையும்” என்றார். வெற்றியை நோக்கிமுன்னேறுவோம் என நம்பிக்கை அளித்தார்.
நாங்கள் போரிடுவதும்எங்களது தியாகமும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிற்கும் சேர்த்துத்தான் என்று கூறிய அந்த மகத்தான தலைவனைத்தான் இன்று அவர்கள் அவதூறு செய்கின்றனர்.“எந்த விலை கொடுத்தாவது ஸ்டாலின்கிராடை கைப்பற்றுங்கள்” என ஆணையிட்டான் இட்லர். ஸ்டாலின்கிராடு போர் குறித்து கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார் அன்னாலூயிஸ் ஸ்ட்ராங்:“அவர்கள்(ஸ்டாலின்கிராடு மக்கள்) ஒவ்வொருவீதிவீதியாக, வீடு வீடாகப் போரிட்டனர். துப்பாக்கிகள், எறிகுண்டுகள், கத்திகள், சமையலறை நாற்காலிகள், கொதிக்கும் தண்ணீர் என அனைத்தும் ஆயுதங்களாயின! தைரியம் இருந்தால் ஒவ்வொரு செங்கல்லும் கோட்டையாக மாறும் என அவர்கள் முழக்கமிட்டனர்.” 182 நாட்கள் ஸ்டாலின்கிராடு மக்கள் போரிட்டனர். 1943ம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் நாள் 3,00,000 இட்லர் படைகள் செஞ்சேனையிடம் சரண் அடைந்தன. உலக மக்களுக்கு இட்லரை தோற்கடிக்க முடியும் எனும் நம்பிக்கை முதன் முதலில் ஏற்பட்டது.1943ல் உக்ரைன் மீட்கப்பட்டது.
1944ல் சோவியத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இட்லர் படைகள் துரத்தப்பட்டன. 1944 ஜூலையில் போலந்திலிருந்து இட்லர் படைகள் துரத்தப்பட்டன. 1945 ஏப்ரலில் பெர்லினில் செஞ்சேனை செங்கொடியுடன் நுழைந்தது.இட்லருக்கு எதிராக 20கோடி மக்களை தியாக உணர்வோடு போரிடவைக்க ஒரு சர்வாதிகாரியால் சாத்தியமா? ஸ்டாலினை அவதூறு செய்பவர்கள் இந்தக் கேள்வியை எழுப்புவது இல்லை. ஏனெனில் அக்கேள்வியை எழுப்பினால் அவர்களது அவதூறு அம்பலமாகிவிடும்.
சோவியத்தின் இழப்புகளும் மறுகட்டமைப்பும்
இட்லருக்கு எதிரான போரில் சோவியத்தின் இழப்புகள் எண்ணிலடங்கா:எ 2.7 கோடி மக்கள் வீடுகளை இழந்தனர்.எ 1700 நகரங்களும் 27,000 கிரா மங்களும் அழிந்தனஎ 38,500 கி.மீ. நீளமுள்ள இரயில்வே பாதை நாசமானது.(இது பூமியின் சுற்றளவைவிட நீளமானது)எ 90சதவீதம் சுரங்கங்கள் நாசமா யின.எ 70 லட்சம் குதிரைகளும் 1.7 கோடி ஆடு, மாடுகளும் 2 கோடி பன்றிகளும் கொல்லப்பட்டன.
எ 3000 பெரிய ஆலைகள் நாச மாயின.எ மிகப்பெரியஅணையான டினீப்பர் அணை உடைக்கப்பட்டது.-“ஸ்டாலின் சகாப்தம்” அன்னாலூயிஸ் ஸ்ட்ராங்எல்லாவற்றிற்கும் மேலாக சுமார் 2 கோடி மக்களை சோவியத் இழந்தது. இதுஏனைய தேசங்களின் ஒட்டு மொத்த இழப்பைவிடக் கூடுதலானது.இந்த இழப்பை ஈடு கட்ட அமெரிக்க ரூஸ்வெல்ட் அரசாங்கம் 6பில்லியன் டாலர்களை கடனாகத் தர வாக்களித்தது. ஆனால்ரூஸ்வெல்ட்டின் மரணத்திற்கு பிறகு வந்த ட்ருமென் அரசாங்கம் கடன் உதவியை மறுத்துவிட்டது. இதனால் அதிர்ச்சிஅடைந்த சோவியத் யூனியன் தன்னந்தனியாக மறுநிர்மாணத்தில் ஈடுபட்டது.
பத்தே ஆண்டுகளில் அதாவது 1955ம் ஆண்டு சோவியத் யூனியன் மறு நிர்மாணத்தில் வெற்றி பெற்றது மட்டுமல்ல; அமெரிக்காவிற்கு இணையாக வல்லரசாக பரிணமித்தது. இத்தகைய மகத்தான மறுநிர்மாணத்தை நோக்கி சோவியத் மக்களை உத்வேகத்துடன் ஈடுபடவைத்த ஸ்டாலினை சர்வாதிகாரி அல்லது கொடுங்கோலன் எனக்கூறுவது அபத்தம் இன்றி வேறு என்ன?முதலாளித்துவ ஆட்சியாளர்களும் எழுத்தாளர்களும் எவ்வளவுதான் அவதூறு செய்தாலும் தோழர் ஸ்டாலினின் புகழைச் சீர்குலைக்கவோஅல்லது அவருக்கு ஏற்படும் ஆதரவையோ தடுக்க முடியாது!