வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்குவதற்காக நாடு தழுவிய அளவில் 12.03.2015 அன்று அனைத்து கிளைகளிலும் ஆர்பாட்டம் நடத்த மத்திய FORUM அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன் ஒரு பகுதியாக சேலம் MAIN தொலைபேசி நிலையத்தில் அனைத்து நகர கிளைகள் சார்பாக ஆர்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்க்கு தோழர்கள் விஜயன் (BSNLEU) சின்னசாமி (NFTEBSNL) கணபதி (AIBSNLEA) கூட்டு தலைமை ஏற்றனர்.
தோழர்கள் M. சண்முக சுந்தரம் (AIBSNLEA) K. சுப்ரமணி (SNEA) C. பாலகுமார் (NFTEBSNL) E கோபால் (BSNLEU) கருத்துரை வழங்கினார்கள்.
சுமார் 100 தோழர்கள் திரளாக பங்கேற்றனர். இறுதியாக தோழர் C. செந்தில்குமார் (BSNLEU) நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் ஆர்பாட்டம் நடை பெற்றது. ஆத்தூர் கிளையில் நடை பெற்ற ஆர்ப்பாட்ட படங்கள் இணைப்பு.










