09.02.2015 அன்று FORUM தலைவர்கள், அமைப்பின் கன்வீனர் தோழர் V.A.N. நம்பூதிரி, தலைமையில் CMD திரு. அனுபம் ஸ்ரீவத்சவா அவர்களை சந்தித்தனர்.
அனைத்து சங்க பொது செயலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். நிர்வாக தரப்பில் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். வேலை நிறுத்த அறிவிப்பை வழங்கியதால் நிர்வாகம் சங்கங்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.
நான்கு மணி நேரம் பேச்சு வார்த்தை நடை பெற்றது. நமது கோரிக்கைகள் அனைத்தும் விவாதிக்கப்பட்டது.
அதன் சாராம்சம்,
1. CMD பதவி நிரப்பப்பட்டுவிட்டது. HR, FIN, CM இயக்குனர் பதவிகள் நிரப்ப அரசிடம் கொண்டு செல்ல பட்டுள்ளது.
2. டவர் வியாபாரத்திற்க்காக, BBNL ஒரு துணை நிறுவனமாகவே இருக்கும்.
3. கிராமபுற சேவைகளுக்கு நஷ்ட ஈடு பெற அழுத்தம் கொடுக்கப்படும்.
4. கருவிகள் வாங்க நடவடிக்கை எடுக்க படும். சிம் கார்ட் டென்டர் பிரச்னை தற்போது சீர் செய்யப்பட்டுள்ளது.
5. BSNL பெயருக்கு சொத்துக்களை மாற்ற அரசாங்கம் தான் முடிவு எடுக்க வேண்டும்.
6. BSNL-MTNL இணைப்பில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
7. ஸ்பெக்ட்ரத்தை தாராளமயப்படுத்தவும், வர்த்தகம் செய்யவும் அனுமதிப்பது தொடர்பாக பதில் சொல்லும்போது 3G யில் எந்த தடையும் இல்லை, ஆனால், 2G யில் அரசாங்கம் அனுமதி தராது என CMD தெரிவித்தார்.
8. ஓய்வூதிய பங்கீடு கணக்கீடு சம்மந்தமாக
DoTயீடம் பேசப்படும்.
9. 1.2 MHz ஸ்பெக் ற்றத்தை திரும்ப ஒப்படைப்பது சம்மந்தமாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
10. டீலய்ட்டீ கமிட்டி பரிந்துரை தொடர்பாக பத்து நாட்களுக்குள் மீண்டும் விவாதிக்கப்படும்.
11. BWA ஸ்பெக்ட்ரம் கட்டணம் திரும்ப பெற தொடர்ந்து பேசபட்டு வருகிறது.
12. ஓய்வூதிர்யர்களுக்கு 78.2% பஞ்சப்படி இணைப்பிற்க்காக கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
13. BSNL ல் பணி அமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு 30% ஓய்வூதிய பலன்கள் பெற FORUM ஒரு விரிவான விவாத குறிப்பு மீண்டும் வழங்கும்.
கூட்ட MINUTES வழங்கப்படும். பிரச்சனைகளில் பெரிய அளவில் தீர்வு காண படாததால், போராட்ட தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு FORUM தலைவர்கள் அரை கூவல் கொடுத்துள்ளனர்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்