சேலம் மாவட்ட FORUM முடிவின்படி 3ம் நாள் தர்ணா போராட்டம், 08.01.2015 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடத்தப்பட்டது.
காலை 10 மணிக்கு துவங்கிய தர்ணா போராட்டத்திற்க்கு, தோழர்கள் S. தமிழ்மணி (BSNLEU), S. சின்னசாமி (NFTEBSNL), P. சம்பத் (SNEA), S. கணபதி (AIBSNLEA), P. அன்பழகன் (TEPU) ஆகியோர் கூட்டு தலைமை தாங்கினார்கள்.
தர்ணா போராட்டத்தை தோழர் P. பன்னீர்செல்வம், கன்வீனர், இரும்பாலை ஊழியர் சங்கம் மற்றும் மாவட்ட தலைவர், CITU துவக்கி வைத்தார்.
தோழர் சுவாமிநாதன், மாவட்ட தலைவர், AIBEA, தோழர் S. செல்லசாமி, மாவட்ட தலைவர், TNGEA, தோழர் K. ரமணி, மாவட்ட செயலர், BSNLPWA, தோழர் ஜெயப்பிரகாஷ், மாநில சிறப்பு அழைப்பாளர், SNEA, தோழர் K. கோவிந்தராஜ், மாநில நிர்வாகி AIBSNLEA, தோழர் P. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலர், TEPU, தோழர் M. சண்முகசுந்தரம், மாவட்ட செயலர், AIBSNLEA, தோழர் M.R. தியாகராஜன், மாவட்ட செயலர், SNEA, தோழர் C. பாலகுமார், மாவட்ட செயலர், NFTEBSNL, தோழர் E. கோபால், மாவட்ட செயலர், BSNLEU ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
தோழர் P. வேணுகோபால் அகில இந்திய தலைவர், AIBSNLEA அவர்கள் போராட்டத்தை முடித்து வைத்து நிறைவுரை வழங்கினார். தோழர் தனசேகரன், மாவட்ட செயலர், SNATTA அவர்கள் நன்றி உரை வழங்கினார்.
தோழர்களே! சேலம் மாவட்டம் எத்தனையோ போராட்ட களம் கண்ட மாவட்டம். ஆனால் முதல் முறையாக, நம் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து 08.01.2015 அன்று மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு நாம் போராட்டம் நடத்தினோம்.
FORUM தலைவர்கள் சிந்தித்தபடி, ஊழியர்களும், அதிகாரிகளும், காலை 9 மணி முதலே அணி அணியாக வர துவங்கி விட்டனர். 500 பேர் அமர ஏற்பாடு செய்திருந்த பந்தலில், 9.30 மணிக்கு நாற்காலிகள் நிரம்பி வழிந்தன.
காவல் துறை அனுமதி என்பது "ஒரு மணி நேரத்திற்க்கு" மட்டும் தான். ஆனாலும் துணிந்து நாம் 5 மணி நேரம் போராட்டம் நடத்தினோம். நம் கோரிக்கையின் நியாத்தை உணர்ந்து காவல் துறையும் நமக்கு ஒத்துழைப்பு நல்கிணார்கள். அவர்களுக்கு நன்றி.
அதை போல் சுமார் 125 பெண் தோழர்கள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்து கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும்.
போராட்டத்தை துவக்கும் பொழுது, நம் வர்க்க குணாம்சத்தை வெளிப்படுத்தும் விதமாக நம் பந்தலுக்கு அருகிலேயே மறியல் செய்து, கைதாகி சிறை சென்ற "ஊரக வளர்ச்சி துறை" ஊழியர்களை வாழ்த்தி கோஷமிட்டோம். பின்னர் தான் தர்னாவை துவக்கினோம்.
சேலம் மாவட்டம் முழுவதும் நம் போராட்டம் பேசப்பட்டது. மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் என்பதால் சுமார் 60 தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை செய்தி நிறுவனங்கள் நம் போராட்டத்தை பதிவு செய்தனர். பல நிறுவனங்கள் பிரசுரிததும், செய்தியை ஒளிபரப்பியும் நமக்கு உதவினார்கள். அவர்களுக்கும் சேலம் மாவட்ட FORUM சார்பாக நன்றிகள்.
போராட்டத்தை வெற்றிகரமாக்க FORUM விளம்பர குழு, தொண்டர் குழு, கையெழுத்து பெற ஒரு குழு என மூன்று குழுக்களை அமைத்தது. அனைத்து செய்தி நிறுவனங்களையும் அழைத்து விளம்பர படுத்தியது, மையமான மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியாக இருந்தும், நாற்காலிகள் இல்லாத போதும் அனைத்து தோழர்களையும் பந்தலில் இருக்க செய்தது, சாலையில் செல்லும் பொது மக்களிடம் சுமார் 2000 கையெழுத்துக்கள் பெற்றது என அவர்களின் பணி பாராட்டும் படி அமைந்தது. தோழர்களுக்கு FORUM அமைப்பின் தோழமை வாழ்த்துக்கள்.
மாவட்டம் முழுவதிலுமிருந்து சுமார் 750 ஊழியர்கள் / அதிகாரிகள் போராட்டத்தில் கலந்து கொண்டது "புதிய சகாப்தம்" என்றால் அது மிகையாகாது.
போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள், அனைத்து சங்க அகில இந்திய, மாநில, மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி தோழர்கள் அனைவருக்கும் சேலம் மாவட்ட FORUM அமைப்பின் நெஞ்சு நிறை நன்றி.
தோழமையுடன்
E. கோபால், கன்வீனர், FORUM
மற்றும் மாவட்ட செயலர், BSNLEU