நடப்பு நிதி ஆண்டில் (2014-15) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.75 சதவீதம் என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. கடந்த நிதி ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட அதே வட்டி விகிதம் இப்போதும் தொடர்கிறது.
5 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி இருக்கிறது. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமையிலான குழு இந்த முடிவினை எடுத்தது. நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அனுமதி கிடைத்த பிறகு அரசிதழில் வெளியிடப்படும்.
2001-ம் ஆண்டில் வருங்கால வைப்பு நிதிக்கு 12 சதவீத வட்டி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பி.எப். நிதியத்திடம் 6 லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது. இதில் இருக்கும் தொகையில் 15 சதவீதம் வரை பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்று நிதி அமைச்சகம் பரிந்துரை செய்திருக்கிறது.