Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, December 11, 2014

11-12-14 தோழர் K.G.போஸ் நினைவு நாள்

அருமைத்தோழர்களே!
1921-ம்ஆண்டுஜூலை7ம் தேதி கல்கத்தா(பெலியகட்டா)
என்னும் ஊரில் உள்ள ஜெயகிருஷ்ண கோபால்பாசு -நிவாணி ஆகிய தம்பதியருக்கு மகனாக பிறந்தாவர்தான் அருமை 
தோழர்K.G.போஸ் ஆவார்.தோழர் மோனிபோஸ்  அவர்கள் 
K.G.B-யின் இளையசகோதரர் ஆவார்
தோழர்.K.G.B-யின் துணைவியாரின் பெயர் பாருல்போஸ்
ஆகும்.மிகவும் வறுமையில் இருந்து,ராமகிருஷ்ணா மிஷன் 
உதவியுடன்பள்ளி படிப்பை துவங்கிய தோழர்.KGB 
ஓரியன்ட் பேன் நிறுவனத்தின்பயிர்ச்சியாளராக 
தொடர்ந்துகொண்டே,பட்டபடிப்பைநிறைவுசெய்தார்.
1941ல் கல்கத்தாவில் உள்ள D.E.T அலுவலகத்தில் 
எழுத்தராக தனது பணியை துவங்கினார்.
தபால்தந்தி இருவேறு இலாக்காக்களாகஇருந்த அந்த தருணத்தில் 
பெரிய தொழிற்சங்க அமைப்புக்களாக அந்தஇயக்கம் பிளவுபட்டிருந்ததுஇது தவிர மேலும் பல சிறிய சங்கங்களும் இருந்தன.

தோழர்.KGB இந்தியன்டெலிகிராப் யூனியனில் உறுப்பினராகிபின்னர் கிளைச் செயலரானார்.1946 - அகில இந்திய தபால் வேலை நிறுத்தமும் - UPTW உருவாக்கமும் 16 அம்ச கோரிக்கைகளை 
வலியுறுத்தி 1946-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெற்றது.

பிரிட்டிஷ் அரசுக்குஎதிராக நடைபெற்றுவந்த சுதந்திர போரின் ஒரு அங்கமாகும் அப்போராட்டம்.அந்த போராட்டம் சட்ட பூர்வமானது அல்ல எனஅரசு அறிவித்ததுவேலை நிறுத்தம் சென்னை,மும்பை,மற்றும் கல்கத்தா என தீயாய் பரவியது.கல்கத்தா நகரம் அதுவரைசந்தித்திராத போராட்ட அனலை சந்தித்தது.பிரிட்டிஷ் அரசு அடிபணிந்து பேச்சு வார்த்தையில் இறங்கியது.மொத்தம்முன்வைக்கப்பட்டுள்ள 16 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பின்னணியில் 26 நாட்களுக்கு பின்னர் 06.08.1946அன்று முடிவிற்கு வந்தது.இவ்வேலைநிறுத்தத்தில் தோழர்.KGB முக்கிய பங்காற்றினார்.

1946 தபால் வேலைநிறுத்தத்தைஅன்று ஆதரித்த காங்கிரஸ் தலைமை 1949ல் சுதந்திரத்திற்கு பின் நடை பெற்ற வேலைநிறுத்தத்தை நசுக்கியது.தலைவர்கள்கைது செய்யப்பட்டனர்.அவ்வமயம் தோழர்.KGB கல்கத்தாவில் கைது செய்யப்பட்டு பின் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.அதற்க்குபின் அவர் திரும்ப வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படவே இல்லை.அதன்பின் 1961-ல் தோழர் KGB வேலை நீக்கம்செய்யப்பட்டார்.
NFPTE - உருவானது 
இக்காலத்தில் ஒன்றுபட்ட சங்கத்தை துவக்கபாபு ஜெகஜீவன்ராம்முன்கை எடுத்தார்,பல சிரமங்களுக்கிடையே 24.11.1954அன்று NFPTE உருவானது.9 சங்கங்களை ( T3, T4, E3 ,E4, R3, R4, P3, P4 & A3) உள்ளடக்கிய NFPTE -க்கு தோழர்.B.N.கோஷ்சம்மேளன செயலரானார்.தோழர்.KG.போஸ் தபால்-மற்றும் தந்தி 3-ம் பிரிவு மற்றும் லையன்ஸ்டாப் ஊழியர்களின் சங்கமேற்கு வங்க மாநில செயலராக தேர்வு செய்யப்பட்டார்.1957 -ல் NFPTE சம்மேளனத்தின் நிர்ப்பந்தம் காரணமாகவே புதியசம்பளகுழு அமைக்கப்பட்டது.
1960 -வேலை நிறுத்தம் 5 நாட்கள் 
அரசின் ESMA அடக்குமுறை,2 வது ஊதியக்குழுவின் பாதகமான பரிந்துரைகளை எதிர்த்து கைது,சஸ்பென்ட்,வேலைநீக்கம்,ஆகிய அடக்குமுறைகளுக்கு இடையே 5 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெற்றது.1963-ல்லூதியானவில் நடைபெற்ற தபால் மூன்றின் அகிலஇந்திய தலைவராக தோழர்.K.G.போஸ் தேர்வு செய்யப்பட்டார்.1966-ல்தோழர்.K.G போஸ் அவர்களின் முயற்சியால் July 12 th committee கல்கத்தாவில் உருவானது.இவ் வமைப்பில் மேற்குவங்கத்தின்அனைத்து உழைப்பாளிகளும் அடங்கிய July 12th committee-க்கு தோழர்.K.G.போஸ் கன்வீனராக தேர்வு செய்யப்பட்டார்.
1968 -செப்டம்பர் 19 வேலைநிறுத்தம் 
"குறைந்த பட்ச ஊதியம் " கோரி 1968 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 -ம் தேதி முதல் வேலைநிறுத்தம் வெடித்தது.அரசு ESMA- வைபிரயோகித்தது.ஊழியர்கள் கைது,சஸ்பென்ட்,வேலை நீக்கம் உட்பட பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள்பழிவாங்கப்பட்டனர்.இப்போராட்டத்தின் ஒரு கட்டத்தில் தோழர்.O.P குப்தா எதிராக செயல்பட்டதால்,K.G.போஸ்அணி,O.P.குப்தா அணி என இருவேறு அணிகளாக உருவானது.1970-ல் நடை பெற்ற சம்மேளன குழு கூட்டத்தில்தோழர்.K.G.போஸ் தலைவராகவும்,தோழர்.A.S.ராஜன் சம்மேளன செயலராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.அயராது உழைத்தநம் அருமைத்தோழர்.K.G.போஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 1974-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் நாள் இம்மண்ணை விட்டுமறைந்தார்.தோழர்.K.G. போஸ் காட்டிய வழியில் எம் அணித்தோழர்கள் தொடர்ந்து ஊழியர்களுக்காக உழைத்து உருவானபேரியக்கம் தான் நமது BSNLEU சங்கமாகும்.ஒன்னேகால் லக்ஷ்சம் உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டு தொடர்ந்து 6முறையாக முதல் அங்கீகாரம் பெற்ற சங்கமாக நாம் திகழ்ந்து வருகிறோம்நமது அன்பிற்குரிய தலைவர் கே.ஜி.போஸ் நம்மை விட்டு பிரிந்து 40 ஆண்டுகள் உருண்டோடி விட்டன . நமது BSNL நிறுவனத்தை காக்கும் போராட்டத்தை இந்நாளில் துவக்குவது மிக சாலச் சிறந்ததாகும். . . .தொடர்ந்து KGBவழியில் முன்செல்வோம்...
BSNL-யைபாதுகாப்போம்...
BSNLEU-வைவளர்ப்போம்...ஊழியர்நலன்பேணுவோம்...
11-12-14 KGB நினைவு நாளில் சூளுரை ஏற்போம். . .

தோழமையுடன் E. கோபால், மாவட்ட செயலர்