JAC கூட்டம் 07.10.2014 இன்று புது தில்லியில் தோழர்.சந்தேஷ்வர்சிங்
தலைமையில் நடந்தது. JACகன்வீனர் .தோழர். பி அபிமன்யூ, JACயில் கலந்துகொண்ட
அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார்.
அதன்பின் விவாதம் தொடங்கியது.
கூட்டம் 23.09.2014 அன்று நடைபெற்ற தர்ணா மற்றும் 30.09.2014 இல்
நடத்தப்பட்ட 2 மணி நேர வெளிநடப்பு, ஆகிய போராட்டங்கள் குறித்து
ஆய்வுசெய்தது, மற்றும் இரண்டு போராட்டங்களின்
வெற்றிக்கு உழைத்திட்ட, ஊழியர்கள்மற்றும் நிர்வாகிகள்
அனைவருக்கும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கூட்டத்தில் உண்மையான
கோரிக்கைகள் தீர்வு நோக்கி பயணிக்காமல்
பிஎஸ்என்எல் நிர்வாகம் பிடிவாதமாக எதிர்மறை
அணுகுமுறை கடைப்பிடிப்பதற்குஅனைத்துதலைவர்களும்வருத்தம்
தெரிவித்தார்கள்
JAC கூட்டம் 27.11.14 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்திற்கு
முடிவுசெய்தது .
நிர்வாகத்திற்க்கு வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்க பட்டு விட்டது. நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும்