நமது மாவட்ட மாநாட்டிற்க்கு அனைத்து தோழமை சங்கங்களையும் அழைத்திருந்தோம். எந்த மாநாட்டிலும் இல்லாத நிகழ்வாக NFTE BSNL சங்கம் சார்பாக அதன் மாவட்ட செயலர் தோழர் C. பாலகுமார் முன்னணி தோழர்களுடன் மாநாட்டில் கலந்து கொண்டார். நல்ல ஒரு வாழ்த்துரை வழங்கினார். இரண்டு சங்கங்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய நிலையை விளக்கினார். ஒற்றுமையின் தேவையை எடுத்து கூறினார். அதே போல் SNEA மாவட்ட செயலர் தோழர் M.R. தியாகராஜன், சிறப்பாக வாழ்த்துரை வழங்கினார். AIBSNLEA மாவட்ட நிர்வாகி தோழர் கணபதி, SEWABSNL மாநில நிர்வாகி தோழர் செட்டிமணி, FNTO மாவட்ட செயலர் தோழர் கமலகூத்தன், TEPU மாவட்ட செயலர் தோழர் P. கிருஷ்ணமூர்த்தி, TNTCWU மாவட்ட செயலர் தோழர் C. பாஸ்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.