ஆத்தூர் மற்றும் வாழப்பாடி கிளையின் இணைந்த 7வது மாநாடு 09-09-2014 அன்று ஆத்தூரில் சிறப்பாக நடை பெற்றது. மாநாட்டிற்க்கு தோழர்கள் ராஜமாணிக்கம் மற்றும் பழனிசாமி கூட்டு தலைமை தாங்கினர். மூத்த தோழர் குமாரசாமி சங்க கொடி ஏற்ற, ஆத்தூர் கிளை பொருளர் தோழர் வேல்விஜய் அஞ்சலி உரை நிகழ்த்தினார்.
ஆத்தூர் கிளை செயலர் தோழர் சின்னசாமி அனைவரையும் வரவேற்றார். மாநாட்டை மாவட்ட செயலர் தோழர் E. கோபால் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் செந்தில்குமார், ஹரிஹரன், வரதராஜன், விஜய் ஆனந்த் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பொருளாய்வு குழுவில் ஆண்டறிக்கை வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது அமைப்பு நிலை விவாதத்தில் உறுப்பினர் அதிகரிப்பு காரணமாக கிளையை URBAN மற்றும் RURAL கிளைகளாக பிரிக்க மாநாடு முடிவு செய்தது.
அதன்படி நிர்வாகிகள் தேர்வு நடத்தப்பட்டு கிழ் கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். URBAN கிளைக்கு தோழர்கள் வரதராஜன், செல்வராஜ், சங்கர் முறையே தலைவர், செயலர், பொருளாராகவும் RURAL கிளைக்கு தோழர்கள் பெரியசாமி, வேல்விஜய், பிட்சுமணி தலைவர், செயலர், பொருளாராகவும் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வாழப்பாடி கிளைக்கு தோழர்கள் பழனிசாமி, மூர்த்தி, பால்ராஜ் ஆகியோர் தலைவர், செயலர், பொருளாராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். வாழப்பாடி கிளை செயலர் தோழர் மூர்த்தி நன்றி கூற மாநாடு இனிதே நிறைவு பெற்றது.