Site Maintained by S. HARIHARAN, District Secretary

Tuesday, September 30, 2014

இரண்டு மணி நேர வெளி நடப்பு வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடந்தது

30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி JAC சார்பாக நடத்தப்பட்ட இரண்டு மணி நேர வெளி நடப்பு வேலை நிறுத்தம், நமது மாவட்டத்தில் இன்று (30.09.2014) சிறப்பாக நடை பெற்றது. 

மாவட்டத்தில் உள்ள முக்கிய அலுவலகங்கள், சேலம் MAIN, ஆத்தூர், ராசிபுரம், திருச்செங்கோடு, நாமக்கல், உள்ளிட்ட முக்கிய CSCக்கள் பூட்டப்பட்டன. 

போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து ஊழியர்களையும், சேலம் மாவட்ட JAC சார்பாக மனதார பாராட்டுகிறோம். 

பெரும்பாலான கிளைகளில் இணைந்த ஆர்பாட்டமும் நடைபெற்றது. URBAN கிளைகள் சார்பாக சேலம் MAIN தொலைபேசி நிலையத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150 ஊழியர்கள் (20 பெண்கள் உட்பட) கலந்து கொண்டனர். 

JAC தலைவர்கள் தோழர்கள் E. கோபால், C. பாலகுமார், C. கமலக்கூத்தன், ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து ஊழியர்களுக்கும், தோழமை வாழ்த்துக்கள். 
தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர், BSNLEU மற்றும் 
கண்வீணர், JAC சேலம் மாவட்டம்.