Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, July 3, 2014

பொது செயலர் தோழர் P. அபிமன்யூ சிறப்பு கூட்டம் - செய்திகள்




02.07.2014 அன்று நமது மத்திய சங்க பொது செயலர் 
தோழர் P. அபிமன்யூ கலந்து கொண்ட சிறப்பு கூட்டம் 
விமர்சையாக சேலத்தில் நடை பெற்றது.

கூட்டத்திற்க்கு தோழர் S. தமிழ்மணி மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். தோழர் E. கோபால், மாவட்ட செயலர் அனைவரையும் வரவேற்று பேசினார். 

தோழர் M. நாராயணசாமி, மாநில உதவி செயலர், சேலம் மாவட்ட சங்க செயல்பாடுகள், RGB தேர்தலில் நாம் பெற்ற மகத்தான வெற்றி, நடை பெற உள்ள போராட்டங்களை எடுத்து கூறி கருத்துரை வழங்கினார்.

நமது மாநில செயலர் தோழர் S. செல்லப்பா, கூட்டத்தில் கலந்து கொண்டு மாநில செயற்குழு முடிவுகள், தமிழ் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களின் போக்கு, நமது போராட்ட திட்டங்கள் உள்ளிட்ட விசயங்களை விளக்கி பேசினார்.

அதன் பின் நமது பொது செயலர் தோழர் P. அபிமன்யூ சிறப்புரையாற்றினார். இன்றைய அரசியல் சூழல், ஆட்சி மாற்றம், புதிய அரசின் பொருளாதார கொள்கைகள், புதிய தொலை தொடர்பு அமைச்சரின் BSNL நிறுவனத்தின் மீதான பார்வை, BSNL நிதி நிலை, உபகரனங்கள் பற்றாக்குறை, ஊழியர் பிரச்சனைகள், நமது சாதனைகள், JAC அமைப்பு, அதிகாரிகள் ஊழியர்கள் கூட்டமைப்பு, தீர்வு காணப்பட்ட பிரச்சனைகள், தீர்க பட வேண்டிய பிரச்சனைகள், அதற்கான நமது திட்டங்கள் என நல்ல ஒரு சிறப்பான உரை நிகழ்த்தினார்.

மாவட்டம் முழுவதிலிமிருந்து சுமார் 250 ஊழியர்கள் கலந்து கொண்டு இறுதி வரை அமைதி காத்து பொது செயலர் உரையை கூர்மையாக கவணித்தது கூட்டத்தின் சிறப்பம்சமாகும்.

இறுதியாக, தோழர் S. ஹரிஹரன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார்.

நன்றி கலந்த தோழமை வாழ்த்துக்களுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர்.