மாநில அமைப்பு செயலர் தோழர் S. தமிழ்மணி, மாநாட்டை துவக்கி வைத்து பல் வேறு விஷயங்களை விளக்கி பேசினார். மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர் தங்கராஜூ, ஹரிஹரன் வாழ்த்துரை வழங்க, மாவட்ட செயலர் தோழர் E. கோபால் மாநாட்டு சிறப்புரை வழங்கினார். தல மட்ட பிரச்சனைகள், போராட்டங்கள், மத்திய, மாநில, மாவட்ட சங்க செய்திகள், புதிய அரசின் கொள்கைகள் என ஏராளமான விஷயங்களை விளக்கி பேசி, புதிய நிர்வாகிகள் தேர்தலையும் நடத்தி வைத்தார்.
ஆண்டறிக்கை, வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு, ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர் பெருமாள், விஜய் ஆனந்த், கிளை செயலர்கள் தோழர் செல்வம், பாலகுமார், சம்பத், ராமசாமி, ராஜலிங்கம், ராஜன், நாராயணன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
தோழர்கள் கணேசன், காளியப்பன், சந்திரன், முறையே தலைவர், செயலர், பொருளராக கொண்ட நிர்வாகிகள் MAIN கிளையின் சார்பாக ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தோழர்கள் பிரசாத், ரவிச்சந்திரன், சந்திரசேகரன் முறையே தலைவர், செயலர், பொருளராக கொண்ட நிர்வாகிகள் CSC கிளையின் சார்பாக ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தோழர்கள் சந்திரசேகரன், சித்ரசேனன், ரவிச்சந்திரன், முறையே தலைவர், செயலர், பொருளராக கொண்ட நிர்வாகிகள் குகை கிளையின் சார்பாக ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.