மாநில சங்க அறைகூவல்படி 04.07.2014 அன்று சேலத்தில் ஆர்பாட்டம் நடை பெற்றது. பொது மேலாளர் அலுவலகம் முன்பு மதிய உணவு இடைவேளை ஆர்பாட்டமாக நடை பெற்றது. தோழர் S. தமிழ்மணி, மாவட்ட தலைவர் போராட்டத்திற்க்கு தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலர் தோழர் E. கோபால், கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர் ஹரிஹரன், தங்கராஜூ, ஷண்முகம், செந்தில்குமார், பெருமாள், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் பாஸ்கரன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
11.07.2014 அன்று நடை பெற உள்ள பெரும் திரள் தர்ணாவை சக்திமிக்கதாக பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடத்துவது எனவும், நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.