1919 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13ம் நாள் இந்திய வரலாற்றில் விடுதலைப்போராட்ட வரலாற்றில் மறக்கமுடியாத மறக்கக் கூடாத நாள்.1600 ஆம்ஆண்டுபிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி வணிகம் செய்யும் நோக்குடன் பிரிட்டிஷ்அரசின் அனுமதி பெற்று இந்தியாவிற்கு வந்தது. படிப்படியாக வேரூன்றிஇந்தியாவில் அன்றைய நிலையில் இருந்த பலவீனங்களைச் சாதகமாக்கிவேரூன்றிக் கொண்டே வந்தது. 1757 ஆம்ஆண்டு பிளாசிப்போரில் வென்று தனதுஅதிகாரத்தை உறுதிப் படுத்தியது. இதற்கு ஆன காலம் 157 ஆண்டுகள்.அதன்பின்பு1857 ஆம் ஆண்டு சிப்பாய் களின் எழுச்சி ஏற்பட்டது. மாமேதை மார்க்ஸ் இதனைமுதல் இந்திய சுதந்திரப் போர் என்று அழைத்தார்.1857 ஆம்ஆண்டுடன் கம்பெனிஆட்சி முடிந்தது. 1858லிருந்து மகாராணியின் நேரடி ஆட்சிக்கு இந்தியாஉட்பட்டது. பெயர் மாறியது. கொள்கை மாறவில்லை.இந்தியாவைக் கொள்ளைஅடிப்பது நிற்கவில்லை.
பொழுதெல்லாம் எங்கள் செல்வம்கொள்ளை கொண்டுபோகவோ?நாங்கள் சாகவோஎன்ற பாரதியின் வரிகள்வரலாற்றை வெளிப்படுத்தக் கூடிய வரிகள்.இந்தியக் கைவினைப் பொருட்கள் புறக் கணிக்கப்பட்டன. இந்தியஆடை களைப் பின் தள்ளி அந்நிய ஆடைகள் முன்னிறுத்தப்பட்டன. தொழில்கள் அழிந்தன. தொழிலாளர்கள்துயருற்றனர்.சுதேசிப் பொருட்களை வாங்குவோம் விதேசிப் பொருட்களைப் பகிஷ் கரிப்போம் என்ற குரல்கள்ஓங்கின.லோகமான்ய பாலகங்காதர திலகர் டாக்டர் அன்னிபெசன்ட் மகாத்மாகாந்தி ஆகியோர்முன்னின்றனர். டாக்டர் பெசன்ட் அவர்கள் ஹோம்ரூல் என்ற (சுயஆட்சி) முழக்கத்தை வெளியிட்டார்.1914 ம்ஆண்டில் இருந்து 19 ம்ஆண்டு முடிய உலகயுத்தம் நடைபெற்றது. உலகம் குலுங்கியது. எண்ணற்ற உயிர்கள்உதிர்ந்தன.இதற்கு இடையில் 1917 ம்ஆண்டு சோவியத் யூனியனில் லெனின் தலைமையில் ஆன கம்யூனிஸ்ட்கட்சியின் தலைமையில் புரட்சி நடைபெற்றது. ஜார் சக்கரவர்த்தியின் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. தொழிலாளர்விவசாயிகள் ஆட்சி அமைந்தது பாரதியின் பார்வையில் இது ஓர் யுகப்புரட்சி.இந்திய மக்களிடமும்விழிப்புணர்வு பெருகியது. பிரிட்டிஷ் ஆட்சி மருண்டது. ரௌலட் என்பவனின் தலைமையில் ஒரு குழுவைஅமைத்தது. இந்தியர்களிடம் ருஷ்யப் புரட்சியின் தாக்கம் எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்தனர். மக்கள்அதனை ஆதரிப்பதும், உத்வேகம் பெற்றதும் ஆக்கம் பெற்று இருப்பதும் புலனாகியது.
ஆகவே அரசு ஒரு சட்டம் இயற்றியது. அதற்கு ரௌலட் சட்டம் என்று பெயரிட்டது.புரட்சிகரமானபிரசுரங்களை அச்சடித்தால் விநியோகித்தால் கையில் வைத்திருந்தால் அவர்களைக் காவலர்கள் கைதுசெய்யலாம். விசாரணை வேண்டாம் நேரடியாக சிறையில் தள்ளலாம் என்று அச்சட்டம் இருந்தது.காந்தியடிகள் இதனை ஆள் தூக்கிச் சட்டம் என்றார். தேசியத் தலைவர்கள் எதிர்த்தனர். சத்தியாகிரக இயக்கம்தொடங்கப்பட்டது. வலுப்பெற்றது. ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன.1919 ஏப்ரல் 6 அன்றுகடையடைப்புக்கு அறைகூவல் விடப்பட்டது. வெற்றிகரமாக நடந்தது. இந்து முஸ்லீம் ஒற்றுமை வலுப்பட்டது.அனைத்து மதத்தவரும் இணைந்தனர். தொழிலாளர் விவசாயிகள் படித்த வகுப்பினர் வணிகர்கள்கைவினைஞர்கள் திரண்டனர். டாக்டர் கைபுதீன் கிச்சலு டாக்டர் சத்யபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.மக்களின் கோபம் கூடுதல் ஆனது.1919 ஆம்ஆண்டு ஏப்ரல் 13 அன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ளஜாலியன் வாலாபாக் மைதானத்தில் பல்லாயிரம் பேர் கூடினர். 20 ஆயிரம் பேர் என்று மதிப்பிடப்படுகிறது.மூன்று பக்கமும், பெருஞ்சுவர், ஒரே ஒரு சிறிய வழி தான் வாசல். வாசல் மறைக்கப்பட்டது. 100 ஆங்கிலசிப்பாய்கள், 50 இந்திய சிப்பாய்கள் பாதையை மறித்தனர். உள்ளிருந்த மக்கள் மீது கடும் துப்பாக்கிக்சூடு 10நிமிடங்கள் இடைவிடாமல் நீடித்தது. 1650 தடவைகள் சுடப்பட்டன. ஒரு சிப்பாய் 33 முறை சுட்டான் வெளியேவரமுடியாமல் மக்கள் உயிரிழந்தனர்.1000 பேருக்கு மேல் உயிரிழப்பு. பல்லாயிரக்கணக்கில் உடல் ஊனம்.உலகமே அதிர்ந்தது. பிரிட்டன் அரசு 379 பேர் உயிரிழந்ததாகக் கூறியது.ஹண்டர் என்பவன் தலைமையில்விசாரணை குழு அமைக்கப்பட்டது. ஜெனரல் டயர் வாக்கு மூலம் தந்தான்.
குண்டுகள் தீர்ந்து விட்டன. இருந்திருந்தால் இன்னும் சுட்டிருப்பேன் என்றான். மக்களை அச்சுறுத்துவதுமட்டும் அல்ல நம்மை நினைத்தாலே குலை நடுக்கம் ஏற்பட வேண்டும் அதற்காகவே இவ்வாறு செய்தேன்என்றான்.சொந்த நாட்டு நலனுக்காக சொந்தத் தொழிலைப் பாதுகாப்பதற்காக நமது முன்னோர் உயிரிழந்தனர்.அனைத்து மதத்தவரும் திரண்டனர்.இன்றைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இராட்சதக் கழுகுகளாகவருகின்றன. நமது ஒற்றுமை முன்பை விடப் பன்மடங்கு தேவை. ஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்கு நமதுவீர வணக்கம் உரித்தாகட்டும்.